கோவை, செப். 10-
கோயம்புத்தூர் மாநகராட்சி குடிநீர் விநியோக துணை விதிகளின்படி 01.10.2013 முதல் அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்பட உள்ளது.  இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்திருப்பதாவது:- கோயம்புத்தூர் மாநகராட்சி குடிநீர் விநியோக துணை விதிகளின்படி 01.10.2013 முதல் அனைத்து குடிநீர் இணைப்புகளுக்கும் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. முந்தைய கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் 01.10.2013-க்கு முன்னர் வீட்டு உபயோக குடிநீர் இணைப்பு பெற்ற இணைப்புதாரர்கள் கூடுதல் வைப்புத்தொகையாக ரூ.4 ஆயிரம், வீட்டு உபயோகமல்லாத குடிநீர் இணைப்பு பெற்ற இணைப்புதாரர்கள் ரூ.7 ஆயிரம் செலுத்தப்பட வேண்டும்.

இதற்கான அறிவிப்பு அனைத்து இணைப்புதாரர்களுக்கும் அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 01.10.2013-க்கு முன்னர் இணைப்பு பெற்று அறிவிப்பு கிடைக்கப் பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்களை அணுகி கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே 15.09.2017-க்கு முன்னர் அறிவிப்பில் உள்ளவாறு கூடுதல் வைப்புத்தொகை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: