பெங்களூரு,

கர்நாடகாவில் முற்போக்கு எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் 25 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் மூத்த பத்திரிக்கையாளரும் தீவிர இந்துத்துவ எதிர்பாளருமான கவுரி லங்கேஷ் கடந்த சில தினங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாடக அரசு, அம்மாநிலத்தைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் 25 பேருக்கு போலிஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. அதில் நடிகரும் எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட், பரகுர் ராமச்சந்திரப்பா, யோகேஷ் மாஸ்டர் உள்பட 25 பேருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அறிவுறுத்தலின் பேரில்  கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: