ஈரோடு, செப்.10-
எஸ்.சி., எஸ்.டி.,யினருக்கு கல்வி உதவித்தொகை குறைப்பிற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பொ.சண்முகம் கூறுகையில்:- பள்ளி கல்வித்துறை சார்பில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக அனந்தகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைத்துள்ளனர். பாடத்திட்டத்தை மேம்படுத்தும் முயற்சியில், பழங்குடியின மக்களின் கல்வி ஞானத்தையும் கருத்தில் கொண்டு அமைக்க வேண்டும்.

தற்போது அவர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச கல்வி நிலையில் மேம்படுத்தப்பட்ட கல்வியை புகுத்தும்போது, அவர்களது கருத்தையும் ஏற்க வேண்டும் என கேட்டுள்ளேம். ஏற்கனவே, இரண்டு முறை அக்கமிட்டியிடம், எங்கள் சங்கம் சார்பிலான கருத்துருவை வழங்கி உள்ளோம். பாடத்திட்டங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் முன், எங்களை சந்திப்பதாக உறுதி அளித்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், எஸ்.சி., எஸ்.டி.,மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை, குறைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உடனடியாக எங்களது கருத்தை பதிவு செய்துள்ளோம். ஏற்கனவே, உயர்கல்வியில் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையையும் குறைப்பது அவர்களது கல்விக்கு தடைபடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

ஆகவே, வரும் செப்.13 ஆம் தேதி சென்னையில் மலைவாழ் மக்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டது தொடர்பாக விவாதித்து போராட்ட அறிவிப்பை வெளியிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: