குன்னூர், செப்.10-
மாவோயிஸ்ட் அமைப்பினரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் குன்னூர் அருகே ஆதிவாசி கிராமத்தில் பலத்த பாதுகாப்புடன் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மாவோயிஸ்ட் அமைப்பினரின் ஊடுருவல் பல்வேறு ஆதிவாசி கிராமங்களில் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மாவட்டத்
தில் உள்ள 115 ஆதிவாசி கிராமங்களுக்கும் சென்று அரசு அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக சுமார் 40 கிராமங்களில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதிவாசி கிராமங்களுக்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை மேற்கொண்டு அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வருவாய் துறையினருக்கு தகவல் கொடுக்க உத்தரவிட்டார்.

இதனால் அனைத்து கிராமங்களுக்கும் அனைத்து அதிகாரிகளும் சென்று அவர்களுக்கு தேவையான இருப்பிட சான்று, சாதி சான்று, வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மருத்துவம் ஆகியவை நேரிடையாக ஆதிவாசிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலேயே வழங்கப்படுகிறது. இதன்தொடர்சியாக, குன்னூர் அருகேயுள்ள சேம்பக்கரை ஆதிவாசி கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆதிவாசிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் கீதாபிரியா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலும், வருவாய்துறை, வனத்துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை, ஊராட்சி ஒன்றியம், கல்வித்துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: