ஜெய்பூர்,

ராஜஸ்தானில் பெண் ஒருவரை காவலர் தாக்கியதை தொடர்ந்து பொதுமக்களுக்கும் காவலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்டம் ராம்கஞ்ச் கிராமத்தில் பெண் ஒருவரை காவலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்ததும் அங்குள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதையடுத்து காவலர்கள் , கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொதுமக்களை விரட்ட முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும் காவலர்களுக்குக் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த வன்முறையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் காயம் அடைந்தனர். வன்முறையை அடுத்து ராம்கஞ்சில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பாதுகாப்பிற்காக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: