மெக்ஸிகோ,

மெக்ஸிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

மெக்ஸிகோவின் சியாபாஸ் மாகாணத்தில் உள்ள பிஹிஹியாபான் நகரில் இருந்து 54 மைல்கள் தொலைவில், பசிபிக் பகுதியில் வியாழனன்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1 புள்ளிகளாக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியது. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த கட்டிடங்களும் , வீடுகளும் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 1985-ம் ஆண்டுக்கு பின்னர் மெக்ஸிகோவில் இப்படி ஒரு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: