சென்னை,

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியின் போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். அப்போது சுற்றுச்சூழல் அனுமதிக்காக லஞ்சம் வாங்கியதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை ஜெயந்தி நடராஜனுக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரி சோதனை நடத்தி வருகின்றனர். சவுக்கார்பேட்டை, திருவெற்றியூர் பகுதிகளில் உள்ள 19 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. போலி நிறுவனங்கள் பேரில் ரூ.421.58 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள சிபிஐ  பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிதாக தொடங்கிய நடப்பு கணக்கு மூலம் வெளிநாடுகளுக்கு பண பரிவர்த்தனை, ஹாங்காங்கில் உள்ள நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் அனுப்பப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளது.

Leave A Reply