மும்பை,

மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் மட்டும் 55 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் புதிதாக பிறந்த 55 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரையிலும் மொத்தம் 187 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அரசு மருத்துவமனையின் அதிகாரி மருத்துவர் சுரேஷ் ஜகத்தாலே கூறுகையில், உயிரிழந்த குழந்தைகள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு குணமடைவதற்கான வாய்ப்பு குறைவு என்ற போது இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பல குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள். மேலும் நுரையீரல் பலவீனமான குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர் என்றார். இந்த மருத்துவமனையில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 100-க்கு 30 சதவிகிதம் உள்ளது.  வட மாநிலங்களில் இது போன்று குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: