சண்டிகர்,

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, குர்மீத் ராம் ரஹீம் தலைமையில் செயல்படும், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகத்தில், இரண்டாவது நாளாக இன்று நடந்த சோதனையில் சட்டவிரோத வெடிமருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, குர்மீத் ராம் ரஹீம் தலைமையில் செயல்படும், சிர்சாவில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அங்கு சோதனை நடத்த அரியானா – பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி காவலர்கள், துணைப்படையினர், பொதுப் நிர்வாக அதிகாரிகள் வெள்ளியன்று அங்கு சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் கோடிககணக்கான ரூபாய் பணம், ஆசிரமத்தில் பயன்படுத்துவதற்கென ப்ரத்யோகமான பிளாஸ்டிக் நாணயங்கள், கம்ப்யூட்டர் டிஸ்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. மேலும் ஆசிரமத்தில், ஐந்து அறைகள் சீலிடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், இண்டாவது நாளாக இன்றும் (செப்.,9) சோதனை நடந்தது. இந்த சோதனையில், அங்கு அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்படும் பட்டாசுகள் தயாரிக்கும் வெடிமருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,தேரா சச்சா சவுதா தலைமையகத்தில் பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கு அனுமதி வாங்கப்படவில்லை. இந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தேரா அமைப்பு மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இங்கிருக்கும் இரண்டு ரகசிய சுரங்கங்களில் ஒன்று, பெண்கள் விடுதிக்கும், மற்றொன்று அங்கிருந்து தப்பி செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.