சென்னை,
சென்னையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள மாணவிகளை காவல் துறையினர் கைது செய்ய முற்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மணி நேரமாக  சாலைமறியல் போராட்டம் நடைபெறும் நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தலைமை ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளை அடித்து மிரட்டி போராட்டத்தை கைவிட வலியுத்தினார். இதைத்தொடர்ந்து மாணவிகளுக்கும் காவல் துறையிருக்கும் இடையே வாக்கு வாதம் நடைபெற்று வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: