சென்னை,

மத்திய அரசு அளித்து வந்த தலித் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்தியதன் காரணமா தமிழக அரசு தலித், பழங்குடி மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை மூன்று மடங்கு குறைத்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2010 -11 முதல் தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் பயிலும் தலித் பழங்குடியினர் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் வருடத்திற்கு தலா ரூ.12.5 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தலித் பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாளில் நிதி நெருக்கடி காரணமாக தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் பயிலும் தலித் பழங்குடியின மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நிதியுதவி , குறைக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் 1.5 லட்சம் மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த அறிவிப்பின் காரணமாக , தற்போது வருடத்திற்கு ரூ.12.5 லட்சம் நிதியுதவி பெற்று வந்த தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் பயின்று வரும் மருத்துவ மானாவர்களுக்கு, இனி கவர்மெண்ட் கோட்டில் பயிலும் மாணவர்கள் பெறும் நிதியுதவி போல, ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கப்படும்.

மருத்துவம் அல்லாத மற்ற பரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கான நிதியுதவியும் இதே போல் குறைக்கப்பட்டுள்ளது.

தலித் பழங்குடியின மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் இத்திட்டத்திற்கு 2016 – 17 ஆண்டிற்கான நிதியாக ரூ.1,279 கோடி வேண்டும். இந்நிலையில் தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவின் கீழ் பயிலும் தலித், பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்காக கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தமிழக அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதி உரிய நேரத்தில் கிடைக்காததால், மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியிலேயே கைவிடுகின்றனர்.

இது குறித்து சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர், எனது கல்விக்காக மாநில அரசு வழக்கு உதவித்தொகை இதுவரை எனக்காக கிடைக்கவில்லை என்பதால் எனது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என கூறினார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பாகா இதே போன்ற மாணவர்களின் கல்விக்கான உதவித்தொகை குறைக்கப்படும் அறிவிப்பு வெளியானதை அடுத்து பலதரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது.

இந்த அறிவிற்கு அதி திராவிட நலத்துறை அமைச்சகம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே மாதம், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 5 வருடங்களாக மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ரூ.1,546 கோடி நிதி வரவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பற்றாக்குறைக்கு மாநில அரசின் நிதியில் தான் ஈடுசெய்து வருகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.

தலித் மாணவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்து, நிதி பற்றாக்குறை காரணமாக ஆண்டுதோறும் 30-க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் கல்லூரிகளில் சேரமுடியால உள்ளனர் என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் சுயநிதி உதவி கல்லூரிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையிலும் , இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 2010 – 11 ஆண்டு முதல் இருந்து தற்போது உதவித்தொகையில் எந்த திருத்தம் செய்யப்படவில்லை.

முன்னால் மேம்பாட்டு ஆணையாளர் கிரிஸ்துதாஸ் காந்தி கூறுகையில்,
நிதியுதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த வருடம் மட்டும் பொறியியல் கல்லூரிகளில் சேரும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை 10,000-ல் இருந்து 40,000 உயர்ந்தது. தற்போது நிதியுதவி குறிக்கப்படுவதின் மூலம் இந்த எண்ணிக்கை மீண்டும் குறையும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: