தில்லி,

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்  தேர்தல் வெள்ளியன்று நடைபெற்றது.  ஜே.என்.யு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 14 வாக்கு சாவடிகள் காலை 9.30 முதல் 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதில் 4,639 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது 58.69% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வெள்ளியன்று இரவு தொடங்கப்பட்ட வாங்குப் பதிவு எண்ணிக்கை  24 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக ஸ்கூல் ஆப் இண்டர்நேசனல் ஸ்டடிஸ், ஸ்கூல் ஆப் சோசியல் சைன்ஸ், ஸ்கூல் ஆப் லேங்குவேஜ், அலுவலக  பொறுப்பாளர் பதவிகளான தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர் பதவிகளுக்கான வாக்கு எண்னிக்கை நடைபெற்று வருகிறது.

2381 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர், துணைப்பொதுச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளுக்கு ஒருங்கிணைந்த  இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களே முன்னணியில் இருந்து வருகின்றனர்.

தலைவர் :

ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி (SFI-AISA-DSF ) – 661

அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) -229

சுயோட்சை (கவுரவ்) – 15

சுயோட்சை (ஃபாரூக்) – 235

அகில பாரதிய வித்யார்த்தி பரிசித் (ABVP ) -568

பிர்சா அம்பேத்கர் பூளே மாணவர் சங்கம் (BAPSA ) – 491

இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI ) – 44

நோட்டா – 94

வெற்று காகிதம் – 14

செல்லாத ஓட்டுகள் – 23

துணை தலைவர் :

ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி (SFI-AISA-DSF )- 802

அகில பாரதிய வித்யார்த்தி பரிசித் (ABVP ) – 592

இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI ) – 115

பிர்சா அம்பேத்கர் பூளே மாணவர் சங்கம் (BAPSA ) – 517

நோட்டா – 290

வெற்று காகிதம் – 41

செல்லாத ஓட்டுகள் – 28

பொது செயலாளர்:

ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி (SFI-AISA-DSF ) – 990

பிர்சா அம்பேத்கர் பூளே மாணவர் சங்கம் (BAPSA ) – 469

அகில பாரதிய வித்யார்த்தி பரிசித் (ABVP ) -519

இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI ) – 144

நோட்டா – 207

வெற்று காகிதம் – 35

செல்லாத ஓட்டுகள் – 16

துணை செயலாளர்:

ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி (SFI-AISA-DSF ) – 762

இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI ) – 98

அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (AISF) – 114

அகில பாரதிய வித்யார்த்தி பரிசித் (ABVP ) -554

சுயோட்சை – 40

பிர்சா அம்பேத்கர் பூளே மாணவர் சங்கம் (BAPSA ) -485

நோட்டா – 274

வெற்று காகிதம் – 33

செல்லாத ஓட்டுகள் – 26

ஸ்கூல் ஆப் இண்டர்நேசனல் ஸ்டடிஸ்

மேரி பெகு ( இடதுசாரி கூட்டணி ) – 302 வாக்குகள்

ஆய்சே கோஷ்(இடதுசாரி கூட்டணி) – 282 வாக்குகள்

சர்தாக் பகாதியா (இடதுசாரி கூட்டணி) – 250 வாக்குகள்

சசி காந்த் திரிப்பதி (இடதுசாரி கூட்டணிரி) – 247 வாக்குகள்

பிரகலாத் குமார் சிங்(சுயயோட்சை)- 239 வாக்குகள்

மொத்தம் வாக்குகள் – 806

மொத்தமுள்ள 5 இடங்களில் 4 இடங்களில் ஒருங்கிணைந்த இடதுசாரி வேட்பாளர்கள் வென்றுள்ளதை அடுத்து ஸ்கூல் ஆப் இண்டர்நேசனல் ஸ்டடிஸ்-ன் ஒருங்கிணைப்பாளர் பதவியை  ஒருங்கிணைந்த இடதுசாரி தக்கவைத்துக்கொண்டது.

ஸ்கூல் ஆப் சோசியல் சைன்ஸ்

 அஜீஸ் அகமத் ரத்தர் (இடதுசாரி கூட்டணி)  – 484 வாக்குகள்

சதீஸ் சந்திர யாதவ் (இடதுசாரி கூட்டணி) – 412  வாக்குகள்

ஸ்ரேயாஸி பிஸ்வாஸ் (இடதுசாரி கூட்டணி) – 477 வாக்குகள்

சுதன்யா பால் (இடதுசாரி கூட்டணி) – 498 வாக்குகள்

சேபல் செர்பா (BASO) – 552  வாக்குகள்

மொத்தம் வாக்குகள் – 1285

மொத்தமுள்ள 5 இடங்களில் 4 இடங்களில் ஒருங்கிணைந்த இடதுசாரி வேட்பாளர்கள் வென்றுள்ளதை அடுத்து ஸ்கூல் ஆப் சோசியல் சைன்ஸ் ஒருங்கிணைப்பாளர் பதவியை  ஐக்கிய இடதுசாரி தக்கவைத்துக்கொண்டது.

ஜெயபிரகாஷ் பிரசாத் கடுமையாக போட்டியிட்டு அவருக்கு எதிரான அவதூறையும், எதிர்மறையான பிரச்சாரத்தையும் கையாண்டு 406 வாக்குகளை பெற்றார்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ஜனநாயக மாணவர் சங்கம், ஒருங்கிணைந்த  இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஸ்கூல் ஆப் லேங்குவேஜ்

500 வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 5 கவுன்சிலர் பதவிகளிளும் ஒருங்கிணைந்த இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களே முன்னணி வகித்து வருகின்றனர்.

 

Leave A Reply