===இகோர் யாகோவ்லேவ்===                                                                                                                                                                      லெனின் அவர்களது தன்னடக்கம் கம்யூனிஸ்ட் லெனினால் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல் நிலைபாடுமாகும். அந்தத் தன்னடக்கம் அவரது தத்துவங்களின் வெளிப்பாடாகத் திகழ்ந்தது.

இதுபற்றி அமெரிக்கப் பத்திரிகையாளர் ஆல்பர்ட்ரைஸ் வில்லியம்ஸ் குறிப்பிட்டதாவது:                                               ‘சமூக வாழ்க்கையில் அவர் வலிந்து புகுத்திய அதே இரும்பு நிகர் கட்டுப்பாட்டை தனது சொந்த வாழ்க்கையிலும் கடைப்பிடித்துக் காட்டினார்… நான் நேஷனல் ஹோட்டலில் தங்கியிருந்த போது லெனின் இரண்டாவது மாடியில் ஒரு அறையை எடுத்திருந்தார். சோவியத் அரசாங்கத்தின் முதல்சட்டம், உணவு வகைகளுக்காக அபரிமிதமாகச் செலவு செய்யப்படுவதை ரத்து செய்ததே… ஒரு மனிதன் சூப் மற்றும் மாமிசம் அல்லது சூப் மற்றும் காஷா சாப்பிடலாம்.

தலைமை கமிஷாராயிருந்தாலும் சரி சமையலறைப் பையனாயிருந்தாலும் சரி அவ்வளவுதான். ஏன் என்றால் கம்யூனிஸ்டுகளின் கோட்பாட்டில் ‘அனைவருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை யாருமே கேக் சாப்பிடக்கூடாது’ என எழுதப்பட்டுள்ளது. சில நாட்களில் மக்களுக்கு சிறிதளவு ரொட்டித் துண்டுகளே கிடைத்தன. இருந்தும் லெனின் சாப்பிட்ட அளவு ரொட்டித் துண்டுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தது. சில சமயங்களில், எப்பொழுதாவது ஒரு முறை மக்களுக்கு ரொட்டித் துண்டுகளே கிடைக்காமலுமிருந்தது.

அந்த நாட்களில் அவருக்கும் ரொட்டியில்லாத நாட்களே… ஐரோப்பிய, அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு லெனின் எழுதிய கடிதத்தில் கூறுகிறார்: ‘ரஷ்ய மக்கள் என்றுமே இதுபோன்றதொரு துன்பதுயரத்தை அனுபவித்ததில்லை. அவர்கள் ராணுவ ஒப்பந்தங்களின் தலையீடு காரணமாக ‘பசி’யின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்’. ஆனால் இதே துன்பதுயரங்களை மக்களோடு சேர்ந்து லெனினும் அனுபவித்தார்.

இந்தக் கருத்துக்களை தொகுத்துக் கூறும்போது ஆல்பர்ட் வில்லியம்ஸ் எழுதுகிறார்: ‘ஒரு துறவித் தன்மையின் தூண்டுகோலுக்கு உட்பட்டு லெனின் இவற்றிலிருந்தெல்லாம் தன்னை ஒதுக்கிக் கொள்ளவில்லை. அவர் கம்யூனிசத்தின் முதல் தத்துவத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார்’.

எடுத்த எடுப்பில் இந்த வார்த்தைகளை கூறிய ஆசிரியருக்கு “ஆரம்பகால சமூக, சமத்துவத்திற்கு முரண்பட்ட ஒரு சமூக சமத்துவத்தை ஸ்தாபிக்க லெனின் போராடுகிறார். கம்யூனிசப் பாசறையின் திணிப்புக்கேற்ப எல்லாம் நடைபெற வேண்டுமென விரும்புகிறார்” எனத் தோன்றலாம். ஆனால் உண்மையின் பக்கம் நாம் ஆல்பர்ட் ரைஸ் வில்லியம்சை திருப்பினால் போதும் சோவியத் அதிகாரத்தை ஸ்தாபிப்பதில் ஒரு சாட்சியாக விளங்கியவர்.

அதில் பங்குகொண்டவர் கம்யூனிச கொள்கையை கொண்டவரிடம் இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டால் அவர் உடனே நல்ல பதிலைத் தருவார். குமுறும் உணர்ச்சிகளோடு சமூக சமத்துவத்தை ஸ்தாபிப்பதற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒருவனுக்கு அவனை பொறுத்து அவனது சொந்த வாழ்க்கையைப் பொறுத்து அது அதன் எளிய பொருளில் மிகவும் அடிப்படையான வெளிப்பாட்டில் சமூக சமத்துவம் என்பது வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு சரக்காக இருக்க முடியாது. சிக்கல் நிறைந்த ஒவ்வொன்றும் காரணத் தோற்றுவாயை கொண்டவைதான். இவ்வாறாக சோசலிஸ்ட் புரட்சியின் மகத்தான பாதை பல மாவட்டங்களில் துவங்கியது. இதை யாரும் புரிந்து கொள்ளலாம்…

லெனினது ‘தன்னடக்கம்’ அவரது வாழ்க்கை பற்றிய நமது விவாதங்களில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. இயற்கையோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒரு மகாமனிதனின் அவனையொத்தவர்களாலும் அவன் காலத்தவர்களாலும் புடம் போட்டு எடுக்கப்பட்ட ஒரு மனிதனின் சொந்த வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் வேறுபடுத்தி பார்த்து குறிப்பிடுவது ஒரு வேளை முறைகேடானதொன்றாகவிருக்கலாம். தலைசிறந்த போல்ஷ்விக் வாட்ஸ்லாவ் வரோவ்ஸ்கி எழுதியதாவது: ‘அவரிடம் பொதுவானவை; குறிப்பிட்டவை என்பவற்றிற்கிடையே எந்த வேறுபாடும் காணக்கிடையாது.

அவரது சமூக வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் எந்த வித்தியாசமும் கிடையாது. இந்த அம்சத்திலும் கூட அவர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டவர்தான். பொது வாழ்வில் தன்னை கரைத்துக் கொண்ட அவர் தனது சொந்த வாழ்க்கையையும் அதற்கேற்ப உருவாக்கிக் கொண்டார். அவரது சொந்த வாழ்க்கை முழுவதுமே அவரது சமுதாய நடவடிக்கைகளின், உருவாக்கமாகத்தான் இருந்தது. இங்கே ஒன்றுக்கு மேற்பட்ட புரட்சி இயக்க அறிவாளிகளைச் சிதைத்து சின்னாபின்னாமாக்கிய, உள்மோதல்கள், சோக நாடகங்கள்; மற்றும் மத்தியதர வர்க்க பாரம்பரியத்தில் உருவான சமரசங்கள் ஆகியவற்றிற்கு இடமே இல்லை’.லெனின் அவர்களது தன்னடக்கத்துடன் கூடிய வாழ்க்கை இயல்பாகவே அரசியல் வாழ்விலும் ‘தன்னடக்கம்’ எனத் தொடர்ந்தது. கட்சியின்பால் அவர் கொண்டிருந்த குறைகாண முடியாத தன்னடக்கத்துடன் கூடிய அணுகுமுறை கட்சிக்கு வெற்றிகளைக் குவித்தது. லெனின் அவர்களது 50வது பிறந்த நாளைக் கவுரவித்து கொண்டாடும் பொருட்டு ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷ்விக்) மாஸ்கோ கமிட்டி 1920ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் லெனின் ஆற்றிய மகத்தானதொரு உரையை திரும்பிப் பார்ப்போம்.
இந்த சந்தர்ப்பத்தில் எந்தவித ஆடம்பர கொண்டாட்டத்திற்கும் லெனின் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்தார் என்பது தெரிந்ததே.

‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ பிரகடனம் செய்யப்பட்ட பின்னரே அவர் கூட்டத்திற்கு வந்தார். அவரை கவுரவித்து அன்பொழுக பேசிய தோழர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தனது 50வது பிறந்தநாள் பேச்சுக்களைக் கேட்ட மக்களுக்கும் உளமாற நன்றி தெரிவிப்பதை மறக்கவில்லை. தன்னைப் பற்றி ஒரு சில வார்த்தைகளைக் கூறிவிட்டு பின்னர் அவர் பேசினார். “அடுத்து நான் போல்ஷ்விக் கட்சியின் இன்றைய அந்தஸ்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை கூற விழைகிறேன்” என்றார். இரண்டு மையக் கருத்துக்களை இணைக்க ‘அடுத்து’ என்ற ஒரே வார்த்தையை பயன்படுத்துவதற்கு மட்டுமே அவர் கவலைப்பட்டார்.

தனது பேச்சைக் கேட்பவர்களுக்கு மற்றுமொரு ஆச்சரியத்தையும் அவர் தன்னுள் வைத்திருந்தார். ‘எனக்கு இந்த எண்ணம், கட்சியின் இன்றைய அந்தஸ்தைப் பற்றி பேச வேண்டும் என்ற எண்ணம் கார்ல் காவுட்ஸ்கியின் வார்த்தைகளிலிருந்து ஏற்பட்டது. 1902ல் புரட்சி மையத்தை மாற்றுவது பற்றிய பிரச்சனையை காவுட்ஸ்கி விவாதித்தார். மேற்கு ஐரோப்பாவுக்கு புரட்சி சக்தியை வாரி வழங்கிய தோற்றுவாய் என்ற  லெனின் அவர்களது தன்னடக்கம் கம்யூனிஸ்ட் லெனினால் கடைப்பிடிக்கப்பட்ட அரசியல் நிலைபாடுமாகும். அந்தத் தன்னடக்கம் அவரது தத்துவங்களின் வெளிப்பாடாகத் திகழ்ந்தது.

இதுபற்றி அமெரிக்கப் பத்திரிகையாளர் ஆல்பர்ட்ரைஸ் வில்லியம்ஸ் குறிப்பிட்டதாவது: ‘சமூக வாழ்க்கையில் அவர் வலிந்து புகுத்திய அதே இரும்பு நிகர் கட்டுப்பாட்டை தனது சொந்த வாழ்க்கையிலும் கடைப்பிடித்துக் காட்டினார்… நான் நேஷனல் ஹோட்டலில் தங்கியிருந்த போது லெனின் இரண்டாவது மாடியில் ஒரு அறையை எடுத்திருந்தார். சோவியத் அரசாங்கத்தின் முதல்சட்டம், உணவு வகைகளுக்காக அபரிமிதமாகச் செலவு செய்யப்படுவதை ரத்து செய்ததே… ஒரு மனிதன் சூப் மற்றும் மாமிசம் அல்லது சூப் மற்றும் காஷா சாப்பிடலாம். தலைமை கமிஷாராயிருந்தாலும் சரி சமையலறைப் பையனாயிருந்தாலும் சரி அவ்வளவுதான்.

ஏன் என்றால் கம்யூனிஸ்டுகளின் கோட்பாட்டில் ‘அனைவருக்கும் ரொட்டி கிடைக்கும் வரை யாருமே கேக் சாப்பிடக்கூடாது’ என எழுதப்பட்டுள்ளது. சில நாட்களில் மக்களுக்கு சிறிதளவு ரொட்டித் துண்டுகளே கிடைத்தன. இருந்தும் லெனின் சாப்பிட்ட அளவு ரொட்டித் துண்டுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தது. சில சமயங்களில், எப்பொழுதாவது ஒரு முறை மக்களுக்கு ரொட்டித் துண்டுகளே கிடைக்காமலுமிருந்தது. அந்த நாட்களில் அவருக்கும் ரொட்டியில்லாத நாட்களே… ஐரோப்பிய, அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு லெனின் எழுதிய கடிதத்தில் கூறுகிறார்: ‘ரஷ்ய மக்கள் என்றுமே இதுபோன்றதொரு துன்பதுயரத்தை அனுபவித்ததில்லை.

அவர்கள் ராணுவ ஒப்பந்தங்களின் தலையீடு காரணமாக ‘பசி’யின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்’. ஆனால் இதே துன்பதுயரங்களை மக்களோடு சேர்ந்து லெனினும் அனுபவித்தார். இந்தக் கருத்துக்களை தொகுத்துக் கூறும்போது ஆல்பர்ட் வில்லியம்ஸ் எழுதுகிறார்: ‘ஒரு துறவித் தன்மையின் தூண்டுகோலுக்கு உட்பட்டு லெனின் இவற்றிலிருந்தெல்லாம் தன்னை ஒதுக்கிக் கொள்ளவில்லை. அவர் கம்யூனிசத்தின் முதல் தத்துவத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார்’.

எடுத்த எடுப்பில் இந்த வார்த்தைகளை கூறிய ஆசிரியருக்கு “ஆரம்பகால சமூக, சமத்துவத்திற்கு முரண்பட்ட ஒரு சமூக சமத்துவத்தை ஸ்தாபிக்க லெனின் போராடுகிறார். கம்யூனிசப் பாசறையின் திணிப்புக்கேற்ப எல்லாம் நடைபெற வேண்டுமென விரும்புகிறார்” எனத் தோன்றலாம். ஆனால் உண்மையின் பக்கம் நாம் ஆல்பர்ட் ரைஸ் வில்லியம்சை திருப்பினால் போதும் சோவியத் அதிகாரத்தை ஸ்தாபிப்பதில் ஒரு சாட்சியாக விளங்கியவர்.

அதில் பங்குகொண்டவர் கம்யூனிச கொள்கையை கொண்டவரிடம் இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டால் அவர் உடனே நல்ல பதிலைத் தருவார். குமுறும் உணர்ச்சிகளோடு சமூக சமத்துவத்தை ஸ்தாபிப்பதற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒருவனுக்கு அவனை பொறுத்து அவனது சொந்த வாழ்க்கையைப் பொறுத்து அது அதன் எளிய பொருளில் மிகவும் அடிப்படையான வெளிப்பாட்டில் சமூக சமத்துவம் என்பது வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு சரக்காக இருக்க முடியாது. சிக்கல் நிறைந்த ஒவ்வொன்றும் காரணத் தோற்றுவாயை கொண்டவைதான். இவ்வாறாக சோசலிஸ்ட் புரட்சியின் மகத்தான பாதை பல மாவட்டங்களில் துவங்கியது. இதை யாரும் புரிந்து கொள்ளலாம்…

லெனினது ‘தன்னடக்கம்’ அவரது வாழ்க்கை பற்றிய நமது விவாதங்களில் பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. இயற்கையோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒரு மகாமனிதனின் அவனையொத்தவர்களாலும் அவன் காலத்தவர்களாலும் புடம் போட்டு எடுக்கப்பட்ட ஒரு மனிதனின் சொந்த வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் வேறுபடுத்தி பார்த்து குறிப்பிடுவது ஒரு வேளை முறைகேடானதொன்றாகவிருக்கலாம். தலைசிறந்த போல்ஷ்விக் வாட்ஸ்லாவ் வரோவ்ஸ்கி எழுதியதாவது: ‘அவரிடம் பொதுவானவை; குறிப்பிட்டவை என்பவற்றிற்கிடையே எந்த வேறுபாடும் காணக்கிடையாது.

அவரது சமூக வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் எந்த வித்தியாசமும் கிடையாது. இந்த அம்சத்திலும் கூட அவர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டவர்தான். பொது வாழ்வில் தன்னை கரைத்துக் கொண்ட அவர் தனது சொந்த வாழ்க்கையையும் அதற்கேற்ப உருவாக்கிக் கொண்டார். அவரது சொந்த வாழ்க்கை முழுவதுமே அவரது சமுதாய நடவடிக்கைகளின், உருவாக்கமாகத்தான் இருந்தது. இங்கே ஒன்றுக்கு மேற்பட்ட புரட்சி இயக்க அறிவாளிகளைச் சிதைத்து சின்னாபின்னாமாக்கிய, உள்மோதல்கள், சோக நாடகங்கள்; மற்றும் மத்தியதர வர்க்க பாரம்பரியத்தில் உருவான சமரசங்கள் ஆகியவற்றிற்கு இடமே இல்லை’.

லெனின் அவர்களது தன்னடக்கத்துடன் கூடிய வாழ்க்கை இயல்பாகவே அரசியல் வாழ்விலும் ‘தன்னடக்கம்’ எனத் தொடர்ந்தது. கட்சியின்பால் அவர் கொண்டிருந்த குறைகாண முடியாத தன்னடக்கத்துடன் கூடிய அணுகுமுறை கட்சிக்கு வெற்றிகளைக் குவித்தது. லெனின் அவர்களது 50வது பிறந்த நாளைக் கவுரவித்து கொண்டாடும் பொருட்டு ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷ்விக்) மாஸ்கோ கமிட்டி 1920ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் லெனின் ஆற்றிய மகத்தானதொரு உரையை திரும்பிப் பார்ப்போம்.

இந்த சந்தர்ப்பத்தில் எந்தவித ஆடம்பர கொண்டாட்டத்திற்கும் லெனின் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்தார் என்பது தெரிந்ததே. ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ பிரகடனம் செய்யப்பட்ட பின்னரே அவர் கூட்டத்திற்கு வந்தார். அவரை கவுரவித்து அன்பொழுக பேசிய தோழர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தனது 50வது பிறந்தநாள் பேச்சுக்களைக் கேட்ட மக்களுக்கும் உளமாற நன்றி தெரிவிப்பதை மறக்கவில்லை.

தன்னைப் பற்றி ஒரு சில வார்த்தைகளைக் கூறிவிட்டு பின்னர் அவர் பேசினார். “அடுத்து நான் போல்ஷ்விக் கட்சியின் இன்றைய அந்தஸ்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை கூற விழைகிறேன்” என்றார். இரண்டு மையக் கருத்துக்களை இணைக்க ‘அடுத்து’ என்ற ஒரே வார்த்தையை பயன்படுத்துவதற்கு மட்டுமே அவர் கவலைப்பட்டார்.

தனது பேச்சைக் கேட்பவர்களுக்கு மற்றுமொரு ஆச்சரியத்தையும் அவர் தன்னுள் வைத்திருந்தார். ‘எனக்கு இந்த எண்ணம், கட்சியின் இன்றைய அந்தஸ்தைப் பற்றி பேச வேண்டும் என்ற எண்ணம் கார்ல் காவுட்ஸ்கியின் வார்த்தைகளிலிருந்து ஏற்பட்டது. 1902ல் புரட்சி மையத்தை மாற்றுவது பற்றிய பிரச்சனையை காவுட்ஸ்கி விவாதித்தார்.

மேற்கு ஐரோப்பாவுக்கு புரட்சி சக்தியை வாரி வழங்கிய தோற்றுவாய் என்ற முறையில் ரஷ்யநாட்டின் வருங்கால பாத்திரம் எப்படியிருக்க வேண்டும். இன்று ரஷ்ய நாட்டில் நடைபெறும் போராட்டம் எப்படி முடிந்தாலும் பரவாயில்லை. இந்த நாட்டு மக்களின் ரத்தம், அவர்களது மகிழ்ச்சி (துரதிருஷ்டவசமாக நம் தாய் திருநாடு இத்தகையோரை மிக அதிக அளவில் படைத்துவிட்டது) விழலுக்கிரைத்த நீர் போல் தியாகவேள்வியில் பலியாகக்கூடாது. அவர்கள் நாகரிக உலகம் முழுவதிலும் சமுதாயப் புரட்சி பறித்த வெற்றிக்கனிகளை சுவைக்க வைப்பார்கள். மேலும் மேலும் அவர்கள் வேகமாக செழிப்புமிக்க கனிகளை பயிரிட்டு பழுக்க வைத்து தருவார்கள்’.

இந்த நீண்ட மேற்கோளை ஏறத்தாழ இரண்டுக்கு கொஞ்சம் அதிகமான பக்கங்கள் கொண்ட அவரது பேச்சின் ஒரு முழுப்பக்கத்தையும் அடைத்துவிட்ட இந்த நீண்ட நேர்கோளை கொடுத்ததில் என்ன அம்சம் உள்ளது? 18 ஆண்டுகளுக்கு முன் ஒரு மனிதனால் எழுதப்பட்ட, இன்று சோசலிஸ்ட் புரட்சிக்கு விரோதியாகிவிட்ட (பரம விரோதி – லெனின் வலியுறுத்திக் கூறுகிறார்) மனிதனால் எழுதப்பட்ட அந்தக் குறிப்பிட்ட வரிகள் லெனினின் 50ஆவது பிறந்தநாளின்போது அவரது நினைவுக்கு வந்ததேன்.

“இடதுசாரி கம்யூனிசம்- ஒரு இளம்பிள்ளைவாதம்” என்ற நூலை எழுதி முடிக்க 1920ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ந்தேதி நாள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது 50வது பிறந்த நாள் கூட்டம் இந்தப் பணி முடிவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்தது. அப்பொழுது லெனின் தனது ஆராய்ச்சியில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இலக்கு, போர்த் தந்திரம் ஆகியவற்றில் மூழ்கிப் போயிருந்தார். அவரது கையெழுத்துப் பிரதியில் அவர் கூறியிருப்பதுபோல் ‘மார்க்சிய இலக்கு; போர்த்தந்திரம் ஆகியவற்றின் வெகுஜன விவாதத்தின் அனுபவம்’ என்பதில் மூழ்கியிருந்தார்.

இதில் லெனின் சந்தேகிக்க வேண்டிய எல்லைக்கோடு இருந்தது. அவரது வெளியீட்டின் உள்ளடக்கம் அன்னிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு கம்யூனிஸ்ட் அகிலத்தின் துவக்க நாளன்று வெளியிடப்பட வேண்டும்.

‘இடதுசாரிக் கம்யூனிசம் – ஒரு இளம்பிள்ளைவாதம்’ என்ற நூலை நாம் திறந்துபார்த்தால் இரண்டாம் பக்கத்தில் கவுட்ஸ்கியின் அதே மேற்கோளை அப்படியே காணலாம். எனவே லெனின் தனது மேஜைக்கு முன்னால் எழுதும்போது எப்படி இருந்திருப்பார் என்பதை கற்பனை செய்யலாம். மேற்கோளை முடித்துவிட்டு அது பற்றி தனது கருத்தை கூறுகிறார். ‘18 ஆண்டுகளுக்கு முன் கார்ல் கவுட்ஸ்கி எவ்வளவு அருமையாக எழுதியுள்ளார்!’ இந்த சமயத்தில் வேண்டுகோள்களுக்கு இணங்கி எழுதுவதை நிறுத்திவிட்டு அவர் கூட்டத்திற்கு போக வேண்டியவரானார். திரும்ப வந்ததும் தான் நிறுத்தியதிலிருந்து மீண்டும் எழுதும் பணியை தொடர்ந்தார்.
காலமும் மக்களும் எனும் நூலில் ‘காட்சிக்கு எளியோன் லெனின்’ கட்டுரையிலிருந்து…
றையில் ரஷ்யநாட்டின் வருங்கால பாத்திரம் எப்படியிருக்க வேண்டும். இன்று ரஷ்ய நாட்டில் நடைபெறும் போராட்டம் எப்படி முடிந்தாலும் பரவாயில்லை. இந்த நாட்டு மக்களின் ரத்தம், அவர்களது மகிழ்ச்சி (துரதிருஷ்டவசமாக நம் தாய் திருநாடு இத்தகையோரை மிக அதிக அளவில் படைத்துவிட்டது) விழலுக்கிரைத்த நீர் போல் தியாகவேள்வியில் பலியாகக்கூடாது. அவர்கள் நாகரிக உலகம் முழுவதிலும் சமுதாயப் புரட்சி பறித்த வெற்றிக்கனிகளை சுவைக்க வைப்பார்கள். மேலும் மேலும் அவர்கள் வேகமாக செழிப்புமிக்க கனிகளை பயிரிட்டு பழுக்க வைத்து தருவார்கள்’.இந்த நீண்ட மேற்கோளை ஏறத்தாழ இரண்டுக்கு கொஞ்சம் அதிகமான பக்கங்கள் கொண்ட அவரது பேச்சின் ஒரு முழுப்பக்கத்தையும் அடைத்துவிட்ட இந்த நீண்ட நேர்கோளை கொடுத்ததில் என்ன அம்சம் உள்ளது? 18 ஆண்டுகளுக்கு முன் ஒரு மனிதனால் எழுதப்பட்ட, இன்று சோசலிஸ்ட் புரட்சிக்கு விரோதியாகிவிட்ட (பரம விரோதி – லெனின் வலியுறுத்திக் கூறுகிறார்) மனிதனால் எழுதப்பட்ட அந்தக் குறிப்பிட்ட வரிகள் லெனினின் 50ஆவது பிறந்தநாளின்போது அவரது நினைவுக்கு வந்ததேன்.

“இடதுசாரி கம்யூனிசம்- ஒரு இளம்பிள்ளைவாதம்” என்ற நூலை எழுதி முடிக்க 1920ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ந்தேதி நாள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது 50வது பிறந்த நாள் கூட்டம் இந்தப் பணி முடிவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்தது. அப்பொழுது லெனின் தனது ஆராய்ச்சியில் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இலக்கு, போர்த் தந்திரம் ஆகியவற்றில் மூழ்கிப் போயிருந்தார். அவரது கையெழுத்துப் பிரதியில் அவர் கூறியிருப்பதுபோல் ‘மார்க்சிய இலக்கு; போர்த்தந்திரம் ஆகியவற்றின் வெகுஜன விவாதத்தின் அனுபவம்’ என்பதில் மூழ்கியிருந்தார்.

இதில் லெனின் சந்தேகிக்க வேண்டிய எல்லைக்கோடு இருந்தது. அவரது வெளியீட்டின் உள்ளடக்கம் அன்னிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு கம்யூனிஸ்ட் அகிலத்தின் துவக்க நாளன்று வெளியிடப்பட வேண்டும்.

‘இடதுசாரிக் கம்யூனிசம் – ஒரு இளம்பிள்ளைவாதம்’ என்ற நூலை நாம் திறந்துபார்த்தால் இரண்டாம் பக்கத்தில் கவுட்ஸ்கியின் அதே மேற்கோளை அப்படியே காணலாம். எனவே லெனின் தனது மேஜைக்கு முன்னால் எழுதும்போது எப்படி இருந்திருப்பார் என்பதை கற்பனை செய்யலாம். மேற்கோளை முடித்துவிட்டு அது பற்றி தனது கருத்தை கூறுகிறார். ‘18 ஆண்டுகளுக்கு முன் கார்ல் கவுட்ஸ்கி எவ்வளவு அருமையாக எழுதியுள்ளார்!’ இந்த சமயத்தில் வேண்டுகோள்களுக்கு இணங்கி எழுதுவதை நிறுத்திவிட்டு அவர் கூட்டத்திற்கு போக வேண்டியவரானார். திரும்ப வந்ததும் தான் நிறுத்தியதிலிருந்து மீண்டும் எழுதும் பணியை தொடர்ந்தார்.

‘காலமும் மக்களும்’ எனும் நூலில் ‘காட்சிக்கு எளியோன் லெனின்’ கட்டுரையிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: