பெங்களூரு;
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் இடதுசாரி சிந்தனையாளர் கௌரி லங்கேஷ் (55) கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக உளவுத்துறை ஐ.ஜி. பி.கே. சிங் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, கௌரி லங்கேஷ் கொலை குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்தது. அதனடிப்படையில், கௌரி லங்கேஷ் கொலை குறித்த விவரங்கள் மற்றும் காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளர், மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்பினார்.

Leave A Reply

%d bloggers like this: