அகர்தலா
நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கல்வியறிவு நாளையொட்டி திரிபுரமாநிலத் தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் பங்கேற்றார். அப்போது பேசிய மாணிக் சர்க்கார் நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருந்த கேரளாவை பின்னுக்கு தள்ளி, திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது என்று தெரிவித்தார்.
நாட்டின் மக்கள் தொகை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கேரளமாநிலம் 93.91 சதவிகிதம் கல்வியறிவு பெற்றிருந்தது. இப்போது 94.65 சதவிகிதம் என்ற உச்ச வரம்பை திரிபுரா மாநிலம் எட்டியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு கல்வியறிவைப் பொருத்தவரை திரிபுரா 12வது இடத்தில் இருந்தது. இதையடுத்து நடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது கல்வியறிவில் 4 வது இடத்தை எட்டியிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்திய புள்ளியல் அதிகாரிகளின் துணையோடு நடந்த கணக்கெடுப்பில் கல்வியறிவில் திரிபுரா நாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது என்று மாணிக் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply