உதவி அல்ல கடமை

நண்பர்களே. தோழர்களே..

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட்டுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இன்னும் வேகம் பெற்று போராட்டங்கள் அதன் இலக்கை அடைய வேண்டும்.

இந்தி திணிப்புக்கு எதிராக ஆட்சியதிகாரத்தை வீழ்த்திய, பல்வேறு காலங்களில் கல்வி மற்றும் சமூகக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான நீண்ட நெடிய போராட்டங்களை சமரசமின்றி நடத்தி வென்றவர்கள் தமிழக மாணவர்கள்.

இப்போதும் அதுபோலொரு யுத்தமே நடக்கிறது. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், ஊக்கமூட்டும் வகையிலும் சமூக வலைதளங்களில் நாம் கடமையாற்றுகிறோம். இவற்றோடு பொருளாதார உதவியும் பிள்ளைகளுக்கு அவசியம். பிள்ளைகள் நம்மிடம் கேட்காது. அப்படிதான் பிள்ளைகளை நாம் வளர்த்துள்ளோம். பிள்ளைகள் கேட்கல என்பதற்காக நாம் வேடிக்கை பார்க்க முடியாது.

போராடும் மாணவர்களுக்கு, களமாடும் மாணவர் இயக்கங்களுக்கு தேடிச் சென்று உதவுங்கள். தொண்டை வரள முழங்கும் பிஞ்சுகள் ஒரு டீ குடிக்கவாவது நம் கைகள் நீள வேண்டும். மாணவர் இயக்கங்கள் தொழிற்சங்கங்கள் அல்ல. போஸ்டர் அடிக்க வேண்டும் என்றாலும் அடுத்தவர் உதவி வேண்டும். கணக்கு கேட்குற ஷங்கர் பட வேலையெல்லாம் வெட்டி பேச்சு. நம் பிள்ளைகள் தவறிழைக்காது. தாராளமாய் தருவோம். இது உதவி அல்ல. நம் கடமை

John Paul

Leave A Reply

%d bloggers like this: