சண்டிகர்,

குருகிராம் மாவட்டத்தில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2 ஆம் வகுப்பு மாணவர் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் பேருந்து ஓட்டுரை காவலர்கள் கைது செய்தனர்.

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த பிரதுமன் தாகூர் என்ற 7 வயது சிறுவன் பள்ளி கழிப்பறையில் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதைக் கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்து ஆசிரியர்களிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் , பள்ளி நிர்வாகத்தினர் விரைந்து சென்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் மாணவரை மீட்டு ஆர்டிமிஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பள்ளில் உள்ள சிசிடிவி காமிரா பதிவை வைத்து காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் , பள்ளியின் பேருந்து ஓட்டுநர் மாணவரை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்தது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து ஓட்டுநரை கைது செய்த காவலர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர், உறவினர்கள், மற்றும் இதர மாணவர்களின் பெற்றோரும் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி , பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பள்ளியின் முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: