மெக்சிகோ ,

மெக்சிகோ நாட்டில் இன்று ஏற்பட்ட  சக்தி வாய்ந்த நிலநடுக்கதால் 6 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியாபாஸ் கடற்கரையில்  இன்று 8.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாகினர். மேலும் ஒரு விடுதியும் , பல வீடுகளும் சேதமடைந்தன.

Leave A Reply