ஒரு முறை எஸ்.ஜி கிட்டப்பா வழக்கு ஒன்றில் சிக்க வைக்கப்பட்டு நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.
நீதிபதி உன் தொழில் என்ன என்று கேட்டார்.
கிட்டப்பா கம்பீரமாக நாடகக் கலைஞர் என்றார்.
என்ன பெரிய கலைஞர்? கேவலமான கூத்தாடி தொழில் தானே ? என்றார் நீதிபதி திமிராக.
அதற்கு கிட்டப்பா என் தொழில் கேவலமானதுதான்.
ஆனால் என் அப்பன் பார்த்த தொழில் அளவுக்கு கேவலமான தொழில் அல்ல என்றார்.
அதற்கு நீதிபதி உன் அப்பா என்ன தொழில் பார்த்தார் என்று கேட்டார்.
உங்களைப் போல நீதிபதி என்றார கிட்டப்பார்.
(இவர் கே.பி. சுந்தராம்பாளின் கணவர் ஆவார்)
—-
தியாகி விஸ்வநாததாஸ் முருகன் வேடத்தில் தேசபக்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி , போலீசார் கைது செய்ய வந்தனர். என்னைத்தான் கைது செய்ய ஆணை உள்ளது. இப்போது நான் முருகன். கடவுளை கைது செய்ய வாரண்ட் உள்ளதா? எனக்கேட்டார் விஸ்வநாத தாஸ்.மக்கள் ஆரவாரம் செய்ய ,போலீசார் பின்வாங்கினர்.நாடகம் முடிந்து வேடம் கலைத்தவுடன், மீண்டும் கைது செய்ய வந்தனர்.பாடியதெல்லாம் முருகன்தான்.நான் அல்ல என்றார் தாஸ். போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் இறந்தபோது முருகன் வேடமிட்டு மயிலாசனத்தில் வைத்து அப்படியே அடக்கம் செய்தனர்.சாதியைச் சொல்லி அவருடன் நடிக்க சில நடிகைகள் மறுத்த போது வள்ளியாக நடித்தவர் கே.பி ஜானகி அம்மா,
  • Mathukkur Ramalingam

Leave A Reply

%d bloggers like this: