ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகள் மனப்பாடம் செய்தால், அதன் பெயர் நாமக்கல்!
அதே பாடத்தை நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் (பள்ளியிலும் கோச்சிங் கேம்பிலும்) பயின்றால் அதன் பெயர் ‘நீட்’!
முன்னது மோசம்! பின்னது அதைவிட மோசம்!
அது பிராய்லர் கோழிப்பண்ணை!
இது?

எவ்வளவு முட்டினாலும் முன்னதில் ஒரு வாய்ப்புதான்! நீட் அதில் ‘வள்ளல்’! திறமைக்கான வாய்ப்பு அல்ல! வசதி படைத்தோர் மீண்டும் மீண்டும் தங்களுக்கு இல்லாத தகுதியை சேகரித்து களமாடுவதற்கான வாய்ப்பு!

ஒன்றறிக: ஓராண்டு மட்டும் படித்துவிட்டு முதல் முறை நீட் எழுத வருவோர், மருத்துவம் பயில பின் வரிசையில் காத்திருக்க வேண்டும் என்பதறிக!

ஒருவர் 5 முறை வரை ஐஏஎஸ் எழுத முடியும் என்பது எதிர்வாதம். சரிதான். படித்து முடித்த பின், விரும்பிய வேலைக்குச்செல்ல ஒருவர் 5 முறை அல்ல 10 முறைகூட முயற்சிக்கலாம். அது வேலைக்கான வாய்ப்பு. ஒரு கிளர்க்காகவோ எஸ்ஐ ஆகவோ வேலை செய்துகொண்டே, அடுத்த இலக்கை நோக்கி நகர்வது நல்லதே!
ஆனால், கல்விக்காக அப்படி காத்திருக்க முடியுமா?
வேலைவாய்ப்பும் கல்வி வாய்ப்பும் ஒன்றா?
முன்னது, கிடைத்ததைக் கொண்டு அடுத்த படியில் ஏறுவது! பின்னது, படியில் ஏறும் முன்பே வழிமறுத்து தடுப்பதல்லவா?

Gunaa Gunasekaran

Leave A Reply