புதுதில்லி,

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆங்காங்கே மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ’தமிழக அரசு சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், அரசியல் கட்சியினர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு நிகராக மாநில பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். அனிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த தடை விதித்துள்ளது. வகுப்பு, புறக்கணிப்பு, சாலை மறியல் போன்ற எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதி மன்றம் வலியுறுத்தி உள்ளது. அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கும் உச்ச நீதி மன்றம் தடைவிதித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: