நாமக்கல்,
நாமக்கல் குளக்கரை சாலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். அனைவரையும் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் வரவேற்றார்.கோரிக்கைகளை விளக்கி மாநில  துணை தலைவர்  சுப்பிரமணியம் , ஆசிரியர் அமைப்பின் செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அனைவர்க்கும் செல்வகுமார் நன்றி கூறினார்-

Leave A Reply