பப்ளிக் டிவியில் பணிபுரிந்த இளம் பெண் பத்திகையாளர் Sumana Nandy கோபம் இது, சுதந்திரச் சிந்தனையின் வெளிப்பாடு இது.

”என்னுடைய இந்த சிறிய அனுபவத்தில் நான் பணிபுரிந்த நிறுவனங்கள் குறித்து எனக்கு பெருமை உண்டு. இன்று நான் வெட்கப்படுகிறேன். ஒரு ‘சுதந்திரமான’ செய்தி நிறுவனம் அயோக்கியத்தனமான அரசுக்கு மட்டை பிடித்துக்கொண்டு இருக்கிறது. அதுவும் மிக வெளிப்படையாக.

பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருப்பவர்களால் மிரட்டல்களுக்கு ஆளாகிய கொடூரமான நேரத்தில் ஒரு பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலையாளிகளை கேள்விகள் கேட்காமல், அவர்களுக்கு எதிரணியினரை கேள்விகள் கேட்பீர்களோ? இதுதான் நேர்மையா? நாம் எங்கே செல்கிறோம்? சில ‘பத்திரிகையாளர்கள்’ இந்த படுகொலையை கொண்டாடுகிறார்கள். இதுதான் சவுதி அரேபியாவிலும், வட கொரியாவிலும் நடந்தது. அந்த நாடுகளை நாம் எட்டுவதற்கு இன்னும் சில மரணங்களே தேவைப்படுகிறது.

ஜனநயகத்தின் நான்காவது தூண் தன் மனசாட்சியை விற்றுவிட்டால், சமூகம் எங்கே செல்லும்?

உங்கள் விஷயத்தில் தோற்று விட்டோம் அம்மா. எனக்குத் தெரிந்தவரையில் இங்கு இருப்பதை விட அமைதியான இடத்தில் நீங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.

(பி.கு: எவ்வளவு முக்கியத்துவமானதாகவும், மதிப்பு மிக்கதாகவும் இருந்தாலும் எனக்கு ரிபப்ளிக் டிவி இனி முதலாளியாக இருக்க முடியாது. அந்த ரவுடித்தனமான தொலைக்காட்சி நிறுவனத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததற்காக வருந்துகிறேன்.)

எப்போதும் குலைத்துக்கொண்டே இருக்கும் இந்துத்துவா வெறியன் அரினாப்பின் முகத்தில் விழுந்த செருப்படி இது.

கௌரி லங்கேஷ்! தனக்கு இருந்த சுதந்திர சிந்தனையை ஒரு இளம் பத்திரிகையாளருக்கு கடத்தி இருக்கிறார். அது இந்திய நாஜிக்களின் முகாம் ஒன்றில் சிறு அதிர்வை உண்டாக்கி இருக்கிறது.

Mathava Raj

Leave A Reply