கன்னியாகுமரி,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரை அபுதாபி கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த மீனவர்கள் ரீகன் (வயது 31), சாரோள் ஜிகின் (26), ரீகன் ஜியோ (35), பிரபாகர் (40) மற்றும் மிடாலத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (32) ஆகியோர் கத்தார் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ,அவர்கள் கடந்த 25ஆம் தேதி விசைப்படகில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அபுதாபி கடற்படையினர் மீனவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறை வைத்தனர். இதையடுத்து 5 மீனவர்களின் குடும்பத்தினரும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரையும் உடனே விடுவிக்க மத்திய அரசு மூலம் அபுதாபி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என மனு கொடுத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: