இதைத்தான் பார்ப்பனியத்தின் ஜாதீய வன்மமாகவும், வக்கிரமாகவும் திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.

பூனாவில் பிராமண சமூகத்தைச் சார்ந்த மேதா விநாயக் கோல் என்பவர் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் துணை இயக்குனராக இருக்கிறார். அவர்கள் குடும்பத்தினர் நடத்திய சடங்குகளின் போது சமையல் வேலைக்கு பிராமண சமூகத்தை சேர்ந்த, திருமணமான பெண்தான் வேண்டும் என்று பார்த்திருக்கின்றனர். நிர்மலா குல்கர்னி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட பெண் அவர்களுக்கு சமைத்துக்கொடுத்திருக்கிறார்.

சில நாட்கள் கழித்து நிர்மலா பிராமணர் அல்ல என்பதும் அவர் நிர்மலா யாதவ் என்றும் அறிய நேர்ந்திருக்கிறது. மேதா விநாயக் கோல் காவல்நிலையத்தில் தங்கள் மதச்சடங்குகளை, உணர்வுகளை நிர்மலா புண்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கின்றனர். ஆள்மாறாட்டம், கடும் ஆத்திரமூட்டல், உள்நோக்கத்துடன் அமைதியை குலைத்தல் என்னும் பிரிவுகளில் நிர்மலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

எந்த காலத்தில் நாம் வாழ்கிறோம்?
பெற்ற உயர்ந்த கல்விக்கும் கடைப்பிடிக்கிற வர்ணாசிரமத்துக்கும் என்ன சம்பந்தம்?
இதில் என்ன ஆள் மாறாட்டம் வாழ்கிறது?
எந்த அமைதி குலைக்கப்பட்டு விட்டது?

வர்ணாசிரம முறைகளைக் கொஞ்சம் கூட தளர்த்திக்கொள்ள முடியாமல் இன்னும் இறுக்கமாக வைத்திருக்கிறார்கள்.

நிர்மலா சமைத்த உணவு செரித்து, அவர்கள் மூளையில் போய் அடைத்துக் கொண்டது போலும்!

தீண்டாமையை வலியுறுத்தும் இந்த ஜென்மங்களை வன்கொடுமைச் சட்டத்தில் முதலில் பிடித்து உள்ளே போட வேண்டும்!

  • Mathava Raj

Leave A Reply

%d bloggers like this: