புதுதில்லி;                                                                                                                                                                                “தில்லி ஜே.என்.யூவில் படித்ததால்தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்” என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்பு சொல்லி இருந்தார். தேர்தலில் நிற்காமல், மக்களின் செல்வாக்கு பெறாமல் இருந்தாலும் இப்படி ஒரு தகுதி இருந்திருக்கிறதோ என நினைக்க வைத்தது. ஆனால் எந்தத் ‘தகுதி’யில் இந்த அறிவுக்கொழுந்து முன்னுக்கு வந்திருக்கிறது என்பதை, அவரது இந்த டுவிட்பகிரங்கப்படுத்தி விட்டது.‘சூரியனுக்கு பல் இல்லாததால், அவருக்கு மெதுவடை படைக்கிறோம்’ என இந்தப் பொங்கலுக்கு சூரிய நமஸ்காரம் செய்திருக்கிறார் நிர்மலா.வழக்கம்போல சங்கிகள் இதற்கும் கிடந்து ஆஹோ, ஓஹோவென கும்மியடிக்கிறார்கள்.என்றும் நமது மக்கள் நிர்மலாவின் டுவிட்டைப் புரட்டி எடுத்திருக்கிறார்கள். இதோ அந்த எதிர்வினைகள்.

 •  “நமது மந்திரிகள் அறிவோடு பேசுவார்களாக”
 •  “நீங்க சூரியன் ‘கிட்ட’ போய் பாத்துதான் சொல்லுறீங்களா பல் இல்லை என்று…”
 •  ”சூரியனுக்கு ஒரு பல் செட்டைக் கட்டிவிட்டால் போதாதா? ஏன்னா புராண காலத்திலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களாயிற்றே !”
 •  “உளுந்து வடை எனக்கும் பிடிக்கும். ஆனால் உங்கள் அரசு வந்த பிறகு பருப்பு விலை கூடி விட்டதால் நிறுத்தி விட்டேன்”
 •  “சூரியன் பல் செக்கப்புக்கு போகவில்லையா? பல்லை சரிசெய்துவிட்டு கரும்பை கடிக்கச் சொல்லுங்கள்”
 •  “மெதுவடையை நிறுத்துங்கள். காவேரி தண்ணீருக்கும், வறட்சி நிவாரணத்துக்கும் வழி சொல்லுங்கள்”
 •  “சட்னி இல்லாமல் சாம்பாரா? எப்படி சூரியனை ஈர்க்கப் போகிறீர்கள்?”
 •  “ரெட்டை இலைலதான வச்சி படைப்பாங்க!”
 •  “அப்படியே இரண்டு இட்லி…”
 •  “சினிமா, டிவி சீரியல்களில் சூரிய பகவானுக்கு பல் இருக்கிறதே..”
 •  “பல்லற்ற வாக்குறுதிகளையும், உறுதிமொழிகளையும் பார்த்து கவலைப்படுகிறோம்”
 •  “உளுந்து வடை போஸ்ட் போட்டு ஆர்கசம் அடைவீங்க! அடுத்தவன் மாட்டுக் கறி போஸ்ட் போட்டா எரியுது”
 •  “நான் ஒரு பிஜேபி ஆதரவாளனாக இருந்தாலும் உங்கள் முட்டாள் தனங்களை எல்லாம் சகித்துக் கொள்ள முடியாது”
 • “இதோ …எங்கள் ராணுவ மந்திரி சுட்டு வீழ்த்த தொடங்கி விட்டார்”
 •  “எதோ அறிவு இருக்கும்போல அதான் பாதுகாப்பு துறை மந்திரி ஆகி இருக்கன்னு பார்த்தேன்… தட் நான் சுட்டேன் சுட்டேன்னு சொன்னது சப்பாத்தியை தான் …”
 • “இந்தியாவுக்கு சிறந்த பாதுகாப்பு!”

– தொகுப்பு : பிரதாபன் ஜெயராமன்.

Leave A Reply

%d bloggers like this: