லக்னோ,

அலிகார் நகரில் வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் நகரில் உள்ள வீடு  ஒன்றில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சிறப்பு கண்காணிப்பாளர் ராகேஷ் பாண்டே கூறுகையில், அலிகார் நகரின் பீமா நகரில் உள்ள வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: