திருப்பூர், செப்.8-
சுமைப்பணித் தொழிலாளியின் மகள் அனிதா மருத்துவப் படிப்புக்குச் செல்லும் வாய்ப்பை நீட் தேர்வு தட்டிப் பறித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், மாணவி அனிதாவிற்கு நியாயம் வழங்க நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் தியாகி குமரன் சிலை முன்பாக வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளர் சங்கச் செயலாளர் எம்.ராஜகோபால் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்டச் செயலாளர் ஆர்.ரங்கராஜ், மோட்டார் சங்கச் செயலாளர் ஒய்.அன்பு, சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பி.பாலன் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உரையாற்றினர். இதில் சுமைப்பணி சங்க நிர்வாகிகள் கனகராஜ், ஈஸ்வரன், ராமர் மற்றும் பெண் தொழிலாளர்கள் உள்பட இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: