அகமதாபாத்;
தமிழகத்தைப் போல ஆயிரக்கணக்கான குஜராத் ‘அனிதா’க்களின் மருத்துவ படிப்பு கனவிலும் ‘நீட்’ கொள்ளி வைத்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்திலுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பார்கவ் படேல். மாநில பாடத்திட்டத்தில் படித்து 92 சதவிகித மதிப்பெண்கள் பெற்றவர். ஆனால் நீட் தேர்வில் 292 மதிப்பெண்களையே பெற முடிந்தது. நீட் தரவரிசைப் பட்டியலிலும் 3,881-வது இடமே கிடைத்தது.

இதனால் அவரின் மருத்துவப் படிப்பு கனவு தகர்ந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிருந்தால் அரசு மருத்துவ கல்லூரியில் பார்கவ் படேலுக்கு எளிதாக இடம் கிடைத்திருக்கும்.

தற்போது பார்கவ் படேலுக்கு பூஜ் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் தருகிறார்கள். ஆனால் ரூ. 17 லட்சம் கட்ட வேண்டும். ஆனால் எங்களால் அவ்வளவு தொகை கட்ட முடியாது என்பதால், அடுத்த ஆண்டு நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக, கோச்சிங் செண்டருக்கு பீஸ் கட்டுவதற்கு ரூ. 1.5 லட்சம் பணத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறோம் என்று பார்கவ் படேல் குடும்பம் கூறுகிறது.

பார்கவ் படேலைப் போலவே, ஹிம்மத் நகரைச் சேர்ந்த ஹனி படேல் என்ற மாணவியும் மாநில பாடத்திட்டத்தில் 92 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றும் நீட்டால் மருத்துவர் வாய்ப்பைப் பறி கொடுத்திருக்கிறார். மோடியின் குஜராத்திலும் நீட் பலரது வாழ்வை குழிதோண்டித் புதைத்திருக்கும் செய்திகள் தற்போது வெளியே வந்து கொண்டிருக்கின்றன. அங்கும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

Leave A Reply