புதுதில்லி, செப். 7-

கவுரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.,கே. ரெங்கராஜன் கூறினார்.

கவுரி லங்கேஷ் கொலை சம்பந்தமாக அவர்  கூறியதாவது:

கர்நாடகத்தில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது இது மூன்றாவது நிகழ்வாகும். இது பத்திரிகையின் உரிமையை ஜனநாயக உரிமையைப் பறிப்பது மட்டுமல்ல, பேச்சுரிமை, எழுத்துரிமையையும் பறிப்பதாகும்.

இந்திராகாந்தி காலத்தில் கொண்டுவரப்பட்டது அறிவிக்கப்பட்ட எமர்ஜன்சி. ஆனால் தற்போது ஒரு புதுவிதமான எமர்ஜன்சி எனும் கருப்பு ஆட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதாவது, என்ன சாப்பிடுவது, என்ன சாப்பிடக்கூடாது என தீர்மானிப்பது எல்லாம் அதிலிருந்து வருவதுதான். அதை ஒட்டியே பத்திரிகையாளர்கள் கவுரி லங்கேஷின் படுகொலையும் அமைந்துள்ளது. அவர் சமூக்க் கட்டுமானத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் எதிராக தனது கருத்துக்களைக் கூறுவதில் சமரசம் செய்து கொள்ளாதவர். நேர்மையான பத்திரிகையாளர். அவரது கருத்துக்கு எதிராக இருப்பவர்கள், அதைப் பத்திரிகையின் மூலம் வெளிப்படுத்தும் சுதந்திரம் உள்ளது.

அதேபோன்று கருத்தை வெளிப்படுத்தாமல் கொலை செய்வது என்பது பத்திரிகை தொழிலுக்கு வருவோரை ஊக்கமிழக்கச் செய்வதாக அமைந்துவிடும். எனவே இவற்றைத் தடுக்கும் பொறுப்பு மத்திய,  மாநில அரசுகளுக்கு உண்டு.

இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் கூறினார்.

(ந.நி.)

Leave A Reply