தீ வைப்பாய் என தெரியும்
உன்னோடு காவல் துறையில்
பணியாற்றும் என் சகோதரி மீது
கை வைப்பாய் என தெரியாது. .

அடத்த்த்தூ. . .
மிருகமே கேள்

நாங்கள் போராளிகள்
எங்களோடு போர்களத்தில்
உங்களால் தாக்கப்படும் பெண்களின்
கைகளை பிடித்தே
காப்பாற்றி இருக்கிறோம்

அடச்ச்ச்சே
அதிகாரியே கேள்

உடலெல்லம் கூசித் துடித்த
எங்கும் தப்பிக்க இடமில்லாத
காக்கி உடை அணிந்த
என் கோவை சகோதரி
எங்கள் பக்கம் நின்றிருந்தால்

இழந்திருக்கும் கரங்களுக்காக வழக்கிட்டிருப்பாய்.

Ramesh Babu

Leave A Reply