புதுதில்லி, செப்.

மதவெறிக்கு எதிராகச் செயல்பட்ட தபோல்கர், பன்சாரே, கல்புர்கி தற்போது கவுரி லங்கேஷ் படுகொலைகள் அனைத்தும் மயிர்க்கூச்செறியும் வித்த்தில் ஒரு பாணியிலேயே அமைந்துள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதுதில்லியில் உள்ள பிரஸ் கிளப் ஆப் இந்தியாவில் புதன் மாலை பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

இத்தகைய கொலைகளைக் கண்டித்திட, சமூகத்தில் இத்தகைய மதவெறி, சகிப்பின்மை மற்றும் வெறுப்பு சூழலை பின்னுக்குத் தள்ளுவதற்காக ஒருங்கிணைந்திட பத்திரிகையாளர்கள் முன்வர வேண்டும்.

நாட்டில் மதவெறி, சகிப்பின்மை மற்றும் வெறுப்பு சூழலைஉருவாக்குபவர்களுக்கு எதிராகப் பேசுகிறவர்களை ஒழித்துக்கட்டுவதற்கு ஒரே மாதிரியான வடிவத்தையே மதவெறியர்கள் பயன்படுத்துகிறார்கள்.  தபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொல்லப்பட்டதுபோலவே இப்போது கவுரி லஞ்கேஷும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

Leave A Reply

%d bloggers like this: