தக்கலை;
தக்கலை கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • 7- வது ஊதியகுழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.தொகுப்பூதியம் மதிப்பூதிய முறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவினர், தக்கலை கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்திற்கு, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். தனியார் பள்ளி கூட்டமைப்பின் பொது செயலாளர் கனகராஜ் மறியல் போராட்டத்தை துவக்கிவைத்தார். இருநூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: