கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மீது அளிக்கப்படும் புகார்களை வாங்க மறுக்கும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என மேற்கு வங்க பாஜக தலைவர் திலில் கோஷ் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தலைவர் திலில் கோஷ் , காவலர்களை தாக்குவது மேற்கு வங்கத்தின் ஜனநாயகம் ஆகும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் காவலர்களை தாக்கும் பொது நாம் ஏன் அதை செய்யக்கூடாது. அதில் எந்த தவறும் இல்லை. மேற்கு வங்க மாநிலத்தில் காவலர்களை தாக்கினால் தான் ஆட்சிக்கு வர முடியும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பாஜக-வினரை தாக்கி வருகின்றனர். எங்களை அடித்துவிட்டு எங்கள் மீதே  காவலர்களை வைத்து வழக்கு பதிவு செய்கின்றனர். இது தொடரக்கூடாது. நாங்கள் அடியை தாங்கி கொண்டு நீதிமன்றத்திற்கும் அலைய முடியாது. எங்களை அடித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் நாங்களும் அடிக்கிறோம். பின் எங்கள் மீது வழக்கு பதிவு செய்துகொள்ளலாம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்தால், காவலர்களை தாக்க வேண்டும். முதலில் மிரட்ட வேண்டும். அதன் பின்னரும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களை தாக்க வேண்டும் என்றார்.

இவரது இந்த பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: