காந்தியைக் கொன்ற
ரத்தக் கறை படிந்த கரங்களை
நீங்கள் இன்னும் கழுவவேயில்லை.
நரேந்திர தபோல்கர்
கோவிந்த் பன்சாரே
கல்புர்கி
கவுரி லங்கேஷின்
குருதியில் மூழ்கி எழுந்த
காவிக் கொடியின் நாற்றம்
டிஜிட்டல் இந்தியாவை
திணற வைத்துக் கொண்டிருக்கிறது.
சாகாத கருத்தாயுங்கள் மீது
இன்னும் எத்தனை முறை
முட்டி மோதப் போகிறீர்கள்?
அகண்ட இந்தியா
கனவைப் போலவே
கடைசி வரை
கரைக்கப்படாமலே
காற்றில் கரையப் போகிறது
கோட்சேவின் அஸ்தி.
– ப.கவிதா குமார்

Leave A Reply

%d bloggers like this: