லக்னோ,
உத்தரபிரதேசத்தில் புறப்பட்ட முதல் நாளில் மெட்ரோ ரயில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர். ஆளுநர் ராம் நாயக்கும் இதில் கலந்து கொண்டார். டிரான்ஸ்போர்ட் நகரில் இருந்து சார்பாக் வரை இயக்கப்படும் இந்த ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் குழுவினர் ரயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை அவசரகால வழி மூலமாக மீட்டு வெளியேற்றினார்கள்.

Leave A Reply

%d bloggers like this: