லக்னோ;
உத்தரபிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு 3 ஆண்டுகளில் 32 சதவிகிதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில், மடாதிபதியான ஆதித்யநாத் மாநில முதல்வராக உள்ளார். சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிடாத- அதிலும் எம்.பி. யாக இருக்கும் ஒருவரை திடீரென முதல்வர் பதவியில் அமர்த்தியது பாஜக. அவர் பதவியேற்று 6 மாதம் முடியப் போவதால், ஆதித்யநாத் தற்போது எம்எல்ஏ ஆக வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இதற்காக உத்தரப்பிரதேச மேலவையில் காலியாகவுள்ள இடத்திற்கு ஆதித்யநாத் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனுவில் ஆதித்யநாத் தனது சொத்து மதிப்பு விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளார். அதில், ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு, கடந்த 3 ஆண்டுகளில் 32 சதவிகிதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் ஆதித்யநாத் போட்டியிட்ட போது தனது சொத்து மதிப்பு ரூ. 72 லட்சத்து 94 ஆயிரம் என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது, அந்த மதிப்பு சொத்து மதிப்பு ரூ. 96 லட்சமாக உயர்ந்துள்ளது என்று கணக்கு காட்டியுள்ளார்.கடந்த 3 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 32 சதவிகிதம் (ரூ.23.80 லட்சம்) உயர்ந்துள்ளது. இதில் 20 கிராம் தங்க காதணி, 10 கிராம் தங்க சங்கிலி ஆகியவை அடங்கும்.
அரசு அளிக்கும் சம்பளத்தை தொடர்ந்து தனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: