யாங்கோன், செப்.6-
இந்தியா வரும் மியான்மர் நாட்டவர்களுக்கு இலவச விசா வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக மியான்மர் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் ஆலோசகர் ஆங் சான் சூகியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தொடர்ந்து இரு தலைவர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஆங்சான் சூகி கூறுகையில், பயங்கரவாதம் மியான்மரில் வேரூ ன்றுவதை அனுமதிக்கமாட்டோம் என்றார். பின்னர் பிரதமர் மோடி கூறு கையில், நீங்கள் சந்திக்கும் சவால்களை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. அண்டை நாடு என்ற முறையில், அதே சவால்களை நாங்களும் எதிர்கொண்டுள்ளோம். இந்திய சிறையில் உள்ள 40 மியான்மர் கைதிகளை விடுதலை செய்வோம்.

மியான்மரில் அமைதி நடவடிக்கைக்கான ஆங் சான் சூகியின் தலைமை போற்றத்தக்கது. ரோகிங்யா பகுதியில் பிரிவினை வாதிகளின் வன்முறை குறித்த மியான்மரின் கவலையை நாங்கள் உணர்ந்துள்ளோம். பாதுகாப்புப் படையினருக்கு எதிரான வன்முறையால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: