தில்லி,

பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபடுவதையும் , சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதையும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், தில்லி, அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 15 வயது சிறுவன் ஜூனைத் கான் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இன்று நடந்த இந்த வழக்குகள் மீதான விசாரணையில், பசுக்களை கடத்தியதாக நாட்டில் தற்போது வரை 66 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதையும் , சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்வதையும் அனுமதிக்க முடியாது என்றும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடக்கும் வன்முறையை தடுக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply