சென்னை, செப்.6-
சமீபத்தில் தமிழக மாவட்டங்கள் சிலவற்றில் பெய்துள்ள தொடர்மழையின் காரணமாகச் சில மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் திருப்தி அளிக்கும் வகையில் உயர்ந்து வருவதாக நீர் ஆதாரத்தரவு மையங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த முறை தேவைக்கு அதிக மழைப்பொழிவு இருந்ததாகப் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம் தவிர்த்து சென்னை, தேனி மாவட்டங்களிலும் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் மட்டும் கடந்த ஜூலை மாதத்தில் மழைப்பொழிவின் அளவு 5.14 மீட்டர்களாகப் பதிவாகியுள்ளது.

தமிழகம் முழுவதுமாக இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த மழைப்பொழிவு 305.3 மில்லிமீட்டர். இந்த அளவீடு இதுவரையில் கடந்த காலங்களில் தமிழகம் ஆண்டு முழுவதும் பருவமழையால் பெறக்கூடிய மழைப்பொழிவின் பொதுவான அளவீடான 217 மில்லிமீட்டர்களைக் காட்டிலும் அதிகம்.  மாலையில் தொடங்கி இரவில் மழை என்பது சென்னையைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் வழக்கமாக இருக்கிறது. இந்த மழையால், மழைப்பொழிவு அதிகமெனப் பதிவானாலும் கூட நிலத்தடி நீர்மட்டம் கடந்த மாதங்களை விட அதிகரித்திருக்கிறது. எனினும் தொடர்ந்து மழை பொய்க்காமல் இருந்தால் மட்டுமே சென்னை, மெட்ரோ வாட்டர் வெளியிட்ட, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திய நிலத்தடி நீர்மட்ட அளவீடான 3.40 மீட்டர் எனும் இலக்கை எட்ட முடியும்.

பரவலாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த அதிக மழைப்பொழிவால் நீர் ஆதாரங்களில் நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளமுடியாமல் போயிருந்தாலும் நிலத்தடி நீர் மட்டம் குறிப்பிட்ட அளவுக்கு உயர்ந்துள்ளது திருப்தி அளிப்பதாக நீர்வள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலத்தடி நீர் மட்டத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் இது நிச்சயம் வரவேற்கத்தக்க மாற்றம் தான் என்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: