வேலூர்,
நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மருத்துவமாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும். தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் அறிவித்தது. இதையடுத்து கடந்த வெள்ளியன்று அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் கடும் கொந்தளிப்புடன் ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 6 நாட்களாக பல கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் தங்கி, ஏழைகளுக்கு சேவை செய்யும் உணர்வும் பண்பும் கொண்ட மருத்துவர்களை உருவாக்குவதற்காகவே மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறோம். நீட் மூலம் அத்தகைய மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. மருத்துவர்களுக்கான அடிப்படை மதிப்பெண்கள் இல்லை, மக்கள் சேவையே என்றும் விளக்கமளித்துள்ளது சி.எம்.சி நிர்வாகம். இதனால் சிஎம்சியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களையும் 60 உயர் சிறப்பு மருத்துவ இடங்களையும் நீட் அடிப்படையில் நிரப்ப மறுத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

Leave A Reply