நாகை,

மயிலாடுதுறை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கட்ராமன். இவர் தான் புதிதாக கட்டியிருந்த வீட்டில் மனைவி மற்றும் 2 மகள்களுடன் உறங்கி  கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த பழைய வீட்டின் சுவர் மழையில் கரைந்து சரிந்து விழுந்தது. இதில் வெங்கட்ராமன், மனைவி கார்த்திகா, மற்றும் இளைய மகள்களும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூத்த மகள் வர்சினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து குத்தாலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply