சென்னை,

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜெயலலிதா நினைவிடத்தில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள்   போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை வலுக்கட்டாயமாக காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

இதேபோல சென்னை கிண்டி சாலையில் ஏராளமான மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவலர்கள் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: