சென்னை,

நீட் தேர்வுக்கு எதிராக இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டம் செய்த மாணவர்கள் மீது அண்ணா சதுக்கம் காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள்   போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்நிலையில் போராட்டம் நடத்திய 19 மாணவர்கள் மற்றும் 8 மாணவிகள் மீதும் அண்ணா சதுக்கம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மெரினாவில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிகிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply