தோழர்களே……

சூரியன் பூமியைச் சுற்ற வில்லை பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்றார். புரூனோ.
உண்மைகள் எப்போதுமே மதவாதிகளுக்குப் பிடிக்காது என்பதால் புரூனோமீது கடவுள் விரோத குற்றச் சாட்டுக்களைச் சுமத்திய கத்தோலிக்கத் திருச்சபை அவருக்கு மரணதண்டனை விதித்தது. புரூனோ உயிரோடு எரித்துக் கொல்லப் பட்டார். நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு அதே கத்தோலிக்கத் திருச்சபை புரூனோவைக் கொன்றதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. எந்த இடத்தில் புரூனோ எரித்துக் கொல்லப் பட்டாரோ அதே இடத்தில் இன்று புரூனோவிற்கு சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

காலந்தோறும் மதவெறியர்கள் தங்கள் கோர தாண்டவத்தையும் கொலைவெறி ஆட்டத்தையும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். லட்சியவாதிகளின் உண்மை பேசுகின்றவர்களின் உயிரைத்தான் அவர்களால் எடுக்க முடிந்திருக்கிறதே தவிர அவர்களின் மயிரைக்கூட அவர்களால் பிடுங்க முடிந்ததில்லை.

தபோல்கர்,பன்சாரே,கல்புர்க்கி வரிசையில் இன்று கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டிருக்கிறார். அந்தக் கொலைவெறியர்கள் இன்னும் எத்தனைபேரைக் கொன்றாலும் உண்மையை ஒருபோதும் கொல்லமுடியாது நண்பர்களே.

உண்மையைக் கண்டு இடதுசாரி சிந்தனைகளைக் கண்டு அஞ்சி நடுங்கும் அந்தக் கோழைகளுக்கு நாம் சொல்லிக் கொள்வது இதுதான் நீங்கள் தபோல்கரை, பன்சாரேயை, கல்புர்க்கியை, கௌரியைக் கொல்லலாம் அவர்களின் சாம்பலிலிருந்து ஆயிரமாயிரம் தபோல்கர்கள்.. பன்சாரேக்கள்… கல்புர்க்கிகள்… கௌரிகள் விஸ்வரூவம் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் எழுத்துக்கள் எரிமலையாய் வெடித்துக்கொண்டேயிருக்கும். உங்கள் உறக்கத்தை அவை கெடுத்துக்கொண்டேதான் இருக்கும். மறந்துவிடதீர்கள்.

-மதுரை பாலன்

Leave A Reply

%d bloggers like this: