கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ், செவ்வாயன்று (செப்டம்பர் 5) பெங்களூருவில் உள்ள அவரது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெங்களூருவில் உள்ள ஆர்.ஆர்.நகர் எனப்படும் ராஜராஜேஸ்வரி நகரில் கௌரி லங்கேஷின் வீடு அமைந்திருக்கிறது. செவ்வாயன்று இரவு 8 மணியளவில் வெளியில் சென்றிருந்த கவுரி, வீடு திரும்பி போது அவர் காரில் இருந்து இறங்கி, கேட்டை திறக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் தலையில் ஒரு குண்டும், நெஞ்சில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில் கவுரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். காவலர்கள் வருவதற்குள் கொலையாளிகள் தப்பிவிட்டனர்.

அனைத்து குண்டுகளும் கவுரியின் முன்பக்கத்தில் இருந்தே பாய்ந்துள்ளன. மிக நெருக்கமாக இருந்தே சுட்டிருக்கிறார்கள். கைரேகைகளையும் மற்ற தடயங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறோம் என ஆர்.ஆர்.நகர் காவலர்கள் தெரிவித்தனர்.

கவுரி லங்கேஷ் கேஷின் இந்த படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மாநில முதல்வர் சித்தராமையா , பத்திரிக்கையாளர்கள் , சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்துத்துவா ஆதரவாளர்களோ, இவரின் படுகொலையை கொண்டாடுகின்றனர். குறிப்பாக டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடி பின் தொடரும் ஒருவரின் பதிவு,

”ஒரு பெண் நாயின் இறப்பிற்கு மற்ற குட்டிகள் வலியுடன் அழுது கொண்டிருக்கிறது.”

முன்னாள் ஜீ நியூஸ் , நெட்வேர்க் 18-ன் பத்திரிக்கையாளர் ஜக்ராத்தி சுக்லா

”கவுரி லங்கேஷ் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டுள்ளார். உங்கள் செயல்கள் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை பழிவாங்கும். அப்போது ஆமென் என கூறுவார்கள் ”

இவரின் மற்றொரு பதிவில்,

”ரத்த புரட்சியின் மீது நம்பிக்கையுடையவர்கள் தற்போது கவுரி லங்கேஷ் விதியை நினைத்து துக்கம் அனுசரிக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும். ”

என கூறியிருந்தார்.

நூற்றுக்கணக்கான பேர் ஜக்ராத்தி சுக்லாவின் பதிவுகளை பகிர்ந்துள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது, பல பேர் இந்த படுகொலையை ஆதரிக்கிறார்கள் என தெளிவாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பலர் ஜக்ராத்தி சுக்லாவை வேலையை விட்டு நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர், ஆனால் அவர் தற்போது என்ற நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என அவரது பக்கத்தில் குறிப்பிடவில்லை.

பத்மா ஜோஷி என்பவர் வெளியிட்டுள்ள பதிவில்,

”பத்திரிக்கையாளர் என்ற பெயரில் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக இழிவான கருத்துகளை பதிவிட்டுள்ள அந்த பெண் எதிர்பார்த்தது போலவே, அவருக்கு வரும் பதில்களும் அனைவரின் கவனத்தையும் அவர் மீது திருப்புகிறது.”

இவர் எந்த ஊடகத்தில் வேலை செய்கிறார். கவுரி லங்கேஷ் படுகொலையை கொண்டாடும் இவரை அனைத்து ஊடகங்களும் ஒன்றிணைந்து பணியில் இருந்து நீக்க வேண்டும் என ஒரு பதிவில் கூறப்பட்டிருந்தது.

ஷீலா ரசித் என்பவர் ,

” ஜீ நியூஸ் முன்னாள் செய்தியாளர் ஜாக்ராத்தி சுக்லா கவுரி லங்கேஷின் படுகொலையை நியாயப்படுத்துகிறார். ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் அவரது படுகொலையை கொண்டாடுகிறார்கள். ”

மேலும் கவுரி லங்கேஷின் படுகொலையை கொண்டாடும் வலது சாரி ஆதரவாளர்கள் சிலர் , இது நக்சல்களின் வேலையாக இருக்கலாம் என பலர் கூறி வருகின்றனர்.

கவுரி லங்கேஷை நக்சல் ஆதரவாளர் என குறிப்பிடப்பட்ட பதிவுகள் சில,

” கவுரி லங்கேஷ் பற்றி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை, இப்போது தான் அவர் நக்சல் ஆதரவாளர் என தெரியவந்தது. அதாவது கொலைகளை ஆதரிப்பவர். அவர் இறந்ததே மேல்… ”

”கவுரி லங்கேஷ் வழக்கு சிபிஐ விசாரிக்க வேண்டும். நக்சல்கள் அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக அவர்களில் ஒருவரையே கொலை செய்வார்கள்.”

” பத்திரிக்கையாளர் மற்றும் நக்சல் ஆதரவாளரான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். ”

கர்நாடக பாஜக எம்.பி., பிரகலாத் ஜோஷி, கவுரி லங்கேஷ் மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு கவுரி லங்கேஷ் வெளியிட்ட ஒரு கட்டுரைக்காக அவர் மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் கவுரி லங்கேஷ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ,அவருக்கு அபராதமும் , சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் அன்றே அவரும் ஜாமீனும் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக பாஜக ஐடி செல் தலைவர் அமித் மால்வியா, கர்நாடக மாநிலம் தர்வாத் பாஜக எம்.பி., பிரகலாத் ஜோஷி, அவதூறு வழக்கில் கவுரி லங்கேஷுக்கு தண்டனை பெற்று தந்துள்ளார். மற்ற பத்திரிகையாளர்கள் இதை கவனத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன் என டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானதை அடுத்து, தற்போது இந்தியா உட்பட நாடு முழுவதும் அமித் மால்வியா-வின் இந்த டிவிட்டர் பதிவு மிக வேகமாக பரவி வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: