கேரளாவின் பாரம்பரிய அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகை சாதி மத பேதம் இன்றி அனைத்து மக்களாலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் தங்கள் வீடுகளில் பூக்கோலமிட்டும் சொந்த பந்தங்களுக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்கள் தந்து மகிழ்கின்றனர். இந்த நாட்களில் கேரளாவின் பாரம்பரிய படகு போட்டியும், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பும், பெண்களின் திருவாதரக்களி நடனமும் நடைபெறும்.

அதேபோல இந்த ஆண்டும் ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஓணத் திருவிழாவின் இறுதி நாளான திங்களன்று மதியம் கேரள மக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் சதியம் உன்னும் வேலையில் கிருஸ்துவ கன்னியாஸ்திரீகள் திருவாதரக்களி நடனம் ஆடுகின்றன வீடியோ ஒன்று இணைய தளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோ காட்சிகள் அன்றைய தினம் ஊடகங்களின் விவாதப் பொருளானது.

இதற்கு காரணம் திருவாதரக்களி நடனம் ஆடும் போது பெண்கள் தங்களது பாரம்பரிய உடையான முண்டு அணிந்திருப்பார்கள். ஆனால் இந்த வீடியோ காட்சியில் கன்னியாஸ்திரீகள் தங்களது பாரம்பரிய உடையான முழு நீள வெள்ளை ஆடையும், தலையில் கருப்பு துணியுடனும் பூக்கோலத்தை சுற்றி ஆடுகின்றனர். சுமார் 45 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பதிவை வலைத்தளங்களின் பதிவிட்ட வலது சாரி ஆதரவாளர் , ஓணம் என்பது இந்துக்களுக்கான விழா என விமர்சித்திருக்கிறார்.

இதையடுத்து, இந்த வீடியோ தொடர்பாக டிவிட்டரில் பல தரப்பில் இருந்தும் பல விதமான கருத்துகள் பதிவிடப்பட்டது.

அனைத்தையும் இந்துத்துவம் என்று சொல்லிக்கொள்வதை கேரள தேவாலயம் கேளிக்கையாக பார்க்கிறது என ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவுகள் வன்முறையை உண்டாக்கும் என்பதற்காக பூக்கோலத்தின் மேல் இயேசு சிலை இருப்பது போன்ற புகைப்படத்தை ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இந்துக்களின் சடங்குளை முதலில் பாராட்டும் கிருஸ்துவர்கள் பின்னாளில் அது தங்களுக்கானது என உரிமை கொண்டாடுவார்கள் என ஒருவரும்,

இவர்கள் சிவனுக்கு பதிலாக இயேசுவை வைத்து இயேசுவிதாரக்களி என மாற்றி விடுவார்கள் என மற்றொருவரும் பதிவிட்டிருந்தனர்.

ஒரு கட்டுரையாளர் கூட , சிலுவை கொண்ட ஓணம் விளக்குகள், முண்டு அணிந்த பாதிரியார், தேவாலய யானைகள், ஜீச்ஸ் சுப்ரவாதம், ஆன்மா கழுககள் எங்கும் உள்ளன என பதிவிட்டிருந்தார்.

 2016 ஆம் ஆண்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஓணம் வாழ்த்து சொல்வதற்கு பதிலாக வாமன ஜெயந்தி வாழ்த்து கூறியிருந்தார். இதன் முதல் தான் ஓணம் பண்டிகையின் மீது இந்து சாயம் பூசப்பட்டு வருகிறது.

இதையடுத்து, கேரள மக்கள்  அனைவரும் ஒன்றிணைந்து அமித்ஷா-விற்கு எதிர்ப்பு தெரிவித்து #PoMoneShaji என்ற ஹெஷ்டேக்-ஐ உருவாக்கி எங்களது கலாசாரத்தில் தலையிடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிய கேரள முதல்வர் பிணராயி விஜயன், சாதி, மதம், இனம் மற்றும் வேறு தடைகளையும் தாண்டி அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்துடன் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம் . ஆனால் வாமனனின் துதிபாடியும், மகாபலியை இழிவுபடுத்தியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கேரளாவையும் எங்களது ஓணம் திருவிழாவையும் அவமானப்படுத்தியுள்ளார் என கூறியிருந்தார்.

கேரள மக்கள் சாதி, மதம் பார்க்காமல் ஒற்றுமையுடன் ஓணம் கொண்டாடுவதற்காக ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஏன் கோபப்படுகிறது. இதை பார்த்து அவர்கள் பொறாமைப்படுகிறார்களா ? இல்லை எங்களுக்குள் இருக்கும் இணக்கைதை உண்மையில் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? எதற்காக எங்கள் பாரம்பரிய பண்டிகையின் மேல் ஆர்.எஸ்.எஸ் – பாஜக இது போன்ற உயர் சாதி இந்து சாயத்தை பூச முயலுகிறது? என பல வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டது.

இந்த கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில், ஆர்.எஸ்.எஸ் – பாஜக புகழும் வாமனன் ஒரு பிராமணர். மகாபலி ராஜா அசுரகுலத்தை சேர்ந்தவர் என்பதே.

சமீபத்தில் எர்ணாகுளத்தில் உள்ள வாமானமூர்த்தி கோவில் அருகில் மகாபலி ராஜாவின் சிலை வைக்க முற்படும் போது, இது இந்து மக்களின் மனதை புண்படுத்தும் என கூறி காவி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுவரை மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் இந்து – முஸ்லீம் மக்களுக்கிடையே மதக்கலவரத்தை உருக்கி அரசியல் ஆதாயம் தேடி வந்த காசி கும்பல், தற்போது கேரளாவில் இந்து – கிருஸ்துவர்களுக்கிடையே சாதி வன்முறையை தூண்டி எப்படியாவது கலவரத்தை உருவாக்கிட வேண்டும் என தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து பார்க்கிறது.  ஆனால் ஒவ்வொரு முறையும் கேரள மக்கள் காவிகும்பலை அம்பலப்படுத்தியும், அவர்களை நிராகரித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • சரண்யா

Leave A Reply