கவுரி லங்கேஷ்.

ஒரு பாசிஸ்ட் பிரதமரானால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு கவுரி லங்கேஷ் கொலை ஒரு உதாரணம். கல்புர்கி, பன்சாரே, தாபோல்கர் என்று இந்த கொலைகள் தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெறுகின்றன. இது போன்ற கொலைகள் நடந்தால், ஒரு ஒப்புக்கு கூட கண்டிக்க மனம் வராத ஒரு அற்ப மனிதனாகவே மோடி இருந்து வருகிறார். தங்களுக்கு எதிராக வலுவான வாதங்களை எடுத்து வைக்கும் ஒரு பத்திரிக்கையாளரோடு விவாதம் செய்வதற்கு எந்த தரவுகளும் இல்லாத காரணத்தினாலேயே இது போன்ற கொலைகள் நடைபெறுகின்றன.

பத்திரிக்கை சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் ஒரு பாசிஸ்டின் ஆட்சியில் இப்படித்தான் தாக்குதலுக்கு உள்ளாக்கும். எத்தனைதான் போட்டோஷாப் செய்து தொடர்ந்து பொய்யைக் கூறினாலும், கவுரி லங்கேஷ் போன்றவர்கள், தொடர்ந்து உண்மைகளை அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த காவி வெறியர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எத்தனை படுகொலைகளை இவர்கள் நிகழ்த்தினாலும், பாசிசத்துக்கு எதிரான குரல்கள் மேலும் வலுவாக ஒலிக்கவே செய்யும். அதை இந்த காவி வெறியர்களால் ஒரு போதும் தடுக்க முடியாது.

இன்னும் 100 வருடம் ஆளப் போகிறோம் என்ற இறுமாப்பில் ஆணவம் தலைக்கேறி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். மோடியை விட மோசமான சர்வாதிகரிகளை உலகம் பார்த்திருக்கிறது. அவர்கள் அனைவரும் இறுதியில் மண்ணையே கவ்வியிருக்கிறார்கள் என்பதை வரலாறு குறித்து எதுவுமே தெரியாத காவி வெறியர்களுக்கு புரியாது

Shankar A

Leave A Reply

%d bloggers like this: