லெனினது வாழ்க்கை அவரது பணிகள் பற்றிய ஒரு மெய் விளக்கத் திரைப்படத்தின் வசனத்தை ஒரு சமயம் நான் எழுத வேண்டியிருந்தது. இந்தப் படம் உள்நாட்டில் திரையிடப்படுவதற்கானதல்ல. ஒரு ராஜ வம்சத்தைச் சேர்ந்தவருக்காக – விஷய ஞானம் படைத்தவர் என புகழ்பெற்ற ஒரு அரசருக்காக – அவரது வேண்டுகோளின்பேரில் அப்படம் தயாரிக்கப்பட்டது. அவர் மிகுந்த ஆர்வத்துடன் லெனினை மதித்தார். ஒரு மகத்தான சிந்தனையாளர். நம் காலத்தின் சிறந்ததோர் அரசியல் தலைவர் என அவர் லெனினை மதித்து அங்கீகரித்தார். எனவே அவ்வரசர் “லெனின் – ஒரு மனிதாபிமானி” என்ற மெய்விளக்கத் திரைப்படத்தை பெறுவது என்ற முடிவுக்கு வந்தார்.

நிச்சயமாக இது ஒரு கவர்ச்சியூட்டும் கருத்தாகும். வெகுதூரத்திலுள்ள, மிகவும் பிற்பட்ட ஒரு நாட்டில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, ஒரு மகத்தான புரட்சியாளரின் போராட்டங்களைப் பற்றிய திரைப்படத்தைக் காட்டுவது பயனுள்ள காரியம் என தோன்றியது. ஆனால் படத்தை தயாரிப்பதற்கான கட்டளை, ஒரு நிபந்தனையுடன் கூடியதாக இருந்தது. லெனின் மனிதாபிமானம், அனுதாபம் கொள்ளும் இயல்பு, சாதாரண மக்களின்பால் அவர் கொண்டிருந்த உண்மையான தீவிர கவனம், அனைத்து மக்களுக்கும் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காக அவர் வழங்கிய மகத்தான காணிக்கை போன்றவைகளை பற்றி மட்டுமே திரைப்படத்தின் கதை இருந்தால்தான் படத்தை போட்டுக் காட்டுவேன் என அவர் நிபந்தனை விதித்தார்.

அவர் நமது வாடிக்கையாளர் ஒரு முட்டாள் அல்ல. அவரும் கூட புதிய கல்விக் கூடங்களைத் திறந்து அவற்றில் சாதாரண விவசாயிகள், கைவினைஞர்கள், ஊக்குவிக்குப்புக்குரிய விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு தொழில்புரிபவர்களும் கூர்ந்து கேட்டு பயன்பெற வேண்டுமென சிபாரிசு செய்தார். அவரை வேறொருவரின் புகழில் குளிர்காய விரும்பியவர் என்று கொள்ளலாம். அதனால்தான் அவர் இத்தகையதொரு படம் ஓரளவுக்கு தனது உருவத்தை பெரிதாக்கிக் காட்டும் என நம்பினார். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் படத்தில் ஒரு வார்த்தை கூட ஒரு கட்டமைப்புக் கூட ஏகாதிபத்தியத்தை கீழ்மைப்படுத்தும் வண்ணம் இருக்கக்கூடாது; அதன் பொருள் என்னவென்றால் லெனினின் புரட்சிகர கருத்துக்கள் பற்றியோ, பணிகளைப் பற்றியோ எந்தவித குறிப்பும் இருக்கக்கூடாது; லெனினது மூத்த சகோதரரின் ஒரு முடி மன்னரின் உயிருக்கே உலைவைக்க முனைந்த அலெக்சாண்டர் உலியநோவின் – பாத்திரம் பற்றி அல்லது ஒரு உண்மையான மக்களின் புரட்சிகர அரசை நிறுவ லெனின் தனது வாழ்க்கையையே தத்தம் செய்தது பற்றிய உண்மை பற்றி எக்காரணம் கொண்டும் எதுவும் கூறக்கூடாது.

இது நடவாத காரியம். லெனின் அவர்கள் சாதாரண மக்களின்பால் காட்டிய அக்கறையைப் பற்றி கூறும்போது சுரண்டும் கூட்டத்தினர்பால் அவருக்கிருந்த ஆழ்ந்த வெறுப்பைப் பற்றி நம்மால் எப்படி கூறாது விடமுடியும்? கல்வி கலாச்சார அம்சங்கள் உட்பட நாட்டின் திட்டவட்டமான மாற்றங்களை அவையனைத்தும் ஒரு அடிப்படையான புரட்சிகரமாற்றத்தின்விளைவினால் மட்டும்தான் லெனின் கருதியிருந்தால் அவை பற்றி நாம் எப்படி பேச முடியும்? ஒரு நீண்ட கதையை சுருக்குவதில் பொருள் சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளான பிறகு படம் தயாரிக்கப்பட்டது. நான் அறிந்த வரை அந்த விஷய ஞானம் படைத்த முடி மன்னரின் நாட்டில் அந்தப் படம் திரையிடப்படவே இல்லை.

இந்தக் கதையைப் பற்றி நான் குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணம், லெனின் அவர்களின் ஒழுக்க தத்துவ அம்சத்தைப் பற்றி பார்ப்பதற்கே. இந்த அம்சத்தில் அவரது குணாம்சத்தை அவரது செயல்பாடுகள், தனது வாழ்க்கை முழுவதும் அவர் நடத்திய போராட்டங்களில் கொண்டிருந்த நோக்கங்கள் ஆகியவற்றிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அதை ஏன் பிரித்துப் பார்க்க முடியாதென்றால் வேறு யாரையும்விட லெனின் ஒருவர் மட்டுமே தனது கருத்துக்களை எழுத்துக்கள் மூலமும் படித்துக் காட்டினார். சமூக முரண்பாடுகளினால் பின்னிப் பிணைக்கப்பட்ட ஒரு உலகத்தில் உலக ஒழுக்கம் என்ற ஒன்று இல்லை. இருக்கவும் முடியாது என நிரூபித்துக் காட்டினார்.

“ஒழுக்கத் தத்துவம்” என்ற வார்த்தைக்கு முதலாளித்துவம் கொண்டுள்ள பொருளை கம்யூனிஸ்ட்டுகள் அங்கீகரிக்கவில்லை என்பதை லெனின் வலியுறுத்திக் கூறியுள்ளார். ஒழுக்க தத்துவம் பற்றிய ஒரு வர்க்கப் பார்வையற்ற அனைத்து போதனைகளும் சுரண்டும் கூட்டத்தினருக்குத்தான், அவர்களது நலன்களுக்குத்தான் சேவை செய்கின்றன. “கம்யூனிஸ்ட் ஒழுக்கத் தத்துவம் கம்யூனிசத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்துவது, கம்யூனிசத்தின் முழுமையான வெற்றி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது”. இந்தக் குறிக்கோளுக்காகத்தான் லெனின் முழுமையாக தனது இதயத்தையும், உள்ளத்தையும் அர்ப்பணித்தார். இந்த உண்மையை உலகறிந்த அவரது பரமவைரிகளும் கூட மறுக்க முடியாது. இத்தகைய ஒரு குறிக்கோளின் ஒழுக்க சாத்தியப் பாட்டை பற்றிய சந்தேகம் மனிதகுல வரலாற்று வளர்ச்சிப் பாதை பற்றிய கருத்துக்களில் உள்ள வித்தியாசங்களை பரீட்சிப்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை. இரண்டு பேர் தங்களது முதுகை வேறு வேறு பக்கம் திருப்பிக்கொண்டு நேரெதிர் திசையில் போக ஆரம்பித்துவிட்டால் அவர்களால் எதைப் பற்றியும் விவாதிக்க முடியாது. எனவே இங்கு தகராறு நின்றுவிடுகிறது.

நானும் வாதத்தைத் தொடர விரும்பவில்லை. இயல்பாகவே நாம் லெனின் அவர்களின் சிந்தனைகளின், வார்த்தைகளின் தோற்றுவாயைப் பார்க்க விழைகிறோம். அவரோடு ஒருமித்த கருத்துக்களைக் கொண்டு அவரது தீர்வுகளுக்கு சாட்சியங்களாக நின்று அவரது நடவடிக்கைகளுக்கும் பங்குதாரர்களாக விளங்கியவர்களின் குரல்களைக் கேட்க விரும்புகிறோம். “அவரது வாழ்நாளில் ஒழுக்கத்துடன் கூடிய தனது உருவத்தை அவர் வெண்கலத்தினால் வடித்துக் கொண்டார். அது பல நூற்றாண்டுகளுக்கு வாழும்” என ரோமன் ரோலண்டினால் புகழாரம் சூட்டப்பட்ட அந்த மனிதனின் தத்துவங்களுக்கு லட்சியங்களுக்கு மிக நெருக்கமாக வர வேண்டும் என்ற பணிவான நம்பிக்கையிலிருந்துதான் லெனின் அவர்களது உள்ளம் எந்த செயல்பாடுகளைக் கொண்டு துடித்தது என்பதை ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலிருந்துதான் இந்த விருப்பம் முகிழ்த்துள்ளது.

ஒரு சமயம் அவரது சுய சரித்திரத்தை எழுதுமாறு லெனின் கேட்டுக் கொள்ளப்பட்டார். 1887 டிசம்பரில் அவர் எழுதியதாவது: “மாணவர்களது தொல்லைகள் காரணமாக நான் முதன்முதலில் கைது செய்யப்பட்டு காஸான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன். பின்னர் காஸானிலிருந்து நாடு கடத்தப்பட்டேன். 1895ஆம் ஆண்டு அவரது சுயசரித்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவர் அதை எழுதி முடித்திருந்தாலும் கூட அவரது வாழ்க்கையில் நேர்ந்த அவரது வாழ்க்கை முழுவதும் செழுமையாக நிரம்பிக்கிடந்த பல சோதனைகளைப் பற்றி லெனின் ஒரு வேளை கூறாமல் விட்டிருப்பார்.

அவரது வாழ்க்கையின் ஆரம்பக் காலத்திலேயே ஒரு புரட்சிக்காரனாக அவர் முடிவு செய்துவிட்டார். தன்னை பற்றிய ஒரு முழுமையான குறிப்பை கண்ணுக்குத் தோன்றும் எதிர்காலத்தில் அவருக்காக காத்திருந்தவைகளைப் பற்றி எழுதுவதற்கு அவருக்கு ஏராளமாக சந்தர்ப்பங்கள் இருந்தன. “ஒரு புகழ்பெற்ற ஆய்வறிஞர் அல்லது பேராசிரியர் என்ற பணியிலிருந்து வாழ்க்கை முழுவதும் தேவை மற்றும் இழப்பு ஆகியவற்றினால் நிர்ப்பந்திக்கப்பட்டு, ஒரு புதிய உலகை சமைக்கும் தலைமறைவு அமைப்பாளர் என்ற பணிக்கு லெனின் தன்னை மாற்றிக் கொண்டார்” என டாக்டர் எம்.ஐ.அவெர்பாக் எழுதுகிறார். “ஒரு வாழ்வை மாற்றிக் கொள்ளல்” என்று லெனினுக்கு கூறப்படும் இந்த வார்த்தைகள் இப்போது விசித்திரமாக ஒலிக்கலாம். ஆனால் லெனினது வாழ்க்கையில் அந்த அம்சத்தில் அவரை எதிர்நோக்கிய ஜீவாதாரமான பிரச்சனையில் அவை பிண்டப் பிரமாணமான உண்மையை மிகத் தெளிவாக புலப்படுத்துகின்றன.

காலமும் மக்களும் எனும் நூலில்
‘காட்சிக்கு எளியோன் லெனின்’ கட்டுரையிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: