புவனேஸ்வர்,

ஒரிசா மாநிலத்தில்  பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்தோரின் எண்ணிக்கை  41 ஆக உயர்ந்துள்ளது.

ஒரிசா மாநிலத்தில் மொத்தமுள்ள  30 மாவட்டங்களில் 22 மாவட்டங்களை ஹெச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்று தாக்கியுள்ளது.  மாநிலம் முழுவதும் 30 பேருக்கு பன்றி காய்ச்சல்  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பன்றியாச்சலால் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜகத்சிங்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, ஒரிசா மாநிலத்தில் கடந்த 8 மாதங்களில் பன்றி காய்ச்சலுக்கு  பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

 

Leave A Reply